69 ரன்னுக்கு 6 விக்கெட். ஆனா மீண்டும் அதே தவறை செய்த இந்திய அணி – கடைசில என்ன ஆச்சி பாத்தீங்களா?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று டிசம்பர் 7-ம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் இந்த ஒருநாள் தொடரை அவர்களிடம் இழக்கவும் நேரிடும். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Mehidy Hasan and Mahmudullah

- Advertisement -

அதன்படி ஆட்டத்தை துவங்கிய பங்களாதேஷ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணி 150 ரன்களை கூட தொடாது என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைய போட்டியின் முடிவில் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் விலாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

அதோடு ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா ஆகியோரது ஜோடி 148 ரன்கள் சேர்த்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. முகமதுல்லா 77 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறிய போது வங்கதேச அணி 46.1-ஓவரில் 217 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் கடைசி நான்கு ஓவர்களில் 54 ரன்கள் அடித்து அசத்தி இறுதியில் 271 ரன்கள் குவித்தது.

Mehidy Hasan

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹதி ஹாசன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 100 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்த வங்கதேச அணி பின்னர் 202 ரன்களை ஒரே விக்கெட்டை மட்டும் இழந்து அடித்தது.

- Advertisement -

இப்படி இந்த போட்டியிலும் இந்திய அணியின் பவுலர்கள் செய்த தவறு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் 69 ரன்கள் 6 விக்கெட் என இருந்தபோது பந்துவீச்சில் மெத்தனம் காட்டிய இந்திய பவுலர்கள் எளிதாக ரன்கள் வரும்படி பந்துவீசி ரன்களை கசிய விட்டனர். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஷ் அணியின் வீரர்கள் மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா, நசும் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க : INDvsBAN : இனி ரோஹித் விளையாட வாய்ப்பில்லை. ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் ஏமாற்றம் – என்ன நடந்தது?

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடந்த போட்டியில் கூட பங்களாதேஷ் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்த வேளையில் இந்திய அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பவுலர்களின் மெத்தனம், பீல்டிங் தவறுகள் என மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement