- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் வந்ததும் பிரச்சனையை தீத்துட்டோம்.. இந்திய அணியில் இனிமேல் இதை அதிகமா பார்ப்பீங்க.. பஹதுலே

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணி முடிந்தளவுக்கு போராடியும் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் இந்தியாவிடம் டி20 தொடரில் சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்தியுள்ள இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படத் துவங்கியுள்ளார். அவர் பயிற்சியாளராக வந்ததும் இந்திய சில மாற்றங்கள் காணப்படுகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

புதிய மாற்றம்:
குறிப்பாக ஒரு காலத்தில் சச்சின், சேவாக், கங்குலி, ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக மாறி முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் தோனிக்கு பின் கேப்டன்களாக செயல்பட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் பந்தை கையிலே எடுப்பதில்லை. இருப்பினும் தற்போது வந்துள்ள கௌதம் கம்பீர் அந்த நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

குறிப்பாக இலங்கை டி20 தொடரில் ரியான் பராக், ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ் முக்கிய நேரத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அதே போல முதல் ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் பந்து வீசினார். இந்நிலையில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதை இனிமேல் அதிகம் பார்க்க முடியும் என பவுலிங் பயிற்சியாளர் சைரஜ் பஹதுலே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய பேட்ஸ்மேன்களும் நல்ல பவுலர்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய முதன்மை திறன் பேட்டிங் என்பதால் பந்து வீச்சில் அதிகம் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் பவுலிங் திறமை உள்ளது. அவர்கள் அதிகமாக பயிற்சி எடுத்தால் தேவைப்படும் போது பவுலிங் வாய்ப்பு கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக டி20 தொடரில் ரிங்கு, சூரியகுமார் ஆகியோர் பந்து வீசி வெற்றியில் பங்காற்றியதை நாம் பார்த்தோம்”

இதையும் படிங்க: என்ன தம்பி இதெல்லாம்? இலங்கை வீரரின் இலவசமான செயலால் கடுப்பான ஜெயசூர்யா.. நடந்தது என்ன?

“அதே போல சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் வருங்காலங்களில் இது ஆல் ரவுண்டர்களின் விளையாட்டாக இருக்கும். குறிப்பாக டாப் 4 – 5 பேட்ஸ்மேன்களில் யாராவது பந்து வீசினால் அது இந்திய அணிக்கு உதவும். வருங்காலங்களில் அதுபோன்ற பங்கை நீங்கள் நிறைய பார்ப்பீர்கள். நாங்கள் ஆடுகளம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை பார்த்து வாய்ப்பு கொடுப்போம். அது எதிரணிக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

- Advertisement -