என்ன தம்பி இதெல்லாம்? இலங்கை வீரரின் இலவசமான செயலால் கடுப்பான ஜெயசூர்யா.. நடந்தது என்ன?

Liyanage
- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலாகே 67*, நிஷாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன் பின் சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 24, ஸ்ரேயாஸ் ஐயர் 23, கே.எல். ராகுல் 31, அக்ஸர் பட்டேல் 33 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதே போல கடைசியில் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபேவும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கடுப்பான ஜெயசூர்யா:
இறுதியில் 1 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 1 ரன் தேவைப்பட்ட போது அர்ஷ்தீப் சிங் சிங்கிள் எடுக்காமல் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார். அதனால் டி20 தொடரில் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தியுள்ள இலங்கை நிம்மதி பெருமூச்சு வைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 101/5 என தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த வெல்லலாகே மற்றும் ஜனித் லியனாகே ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தனர். அந்த நிலையில் அக்சர் படேல் வீசிய 35வது ஓவரின் 2வது பந்தை லியானாகே இறங்கி சென்று அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

இருப்பினும் அதைத் தவற விட்ட அவருடைய பேட் தரையில் உரசியது. அதே சமயம் தரையில் பட்ட பந்து சுழன்று முதல் ஸ்லிப் பகுதியில் நின்ற ரோகித் சர்மாவின் கையில் தஞ்சமடைந்தது. அதனால் அக்சர் படேல் மற்றும் இந்திய அணியினர் அவுட் கேட்டனர். இருப்பினும் அதை நடுவர் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் அந்தப் பந்து தம்முடைய பேட்டில் பட்டதாக நினைத்துக்கொண்ட லியனாகே அவுட் என்று கருதி களத்திலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: என்ன எல்லாமே நான் தான் பண்ணனுமா? வாஷிங்டன் சுந்தரிடம் செல்லமாக கோபித்த ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

மறுபுறம் பேட்ஸ்மேனே தாமாக செல்வதால் அது அவுட்டாகத் தான் இருக்கும் என்று நினைத்த அம்பயர் லியனாகே வெளியேறுவதை பார்த்து விட்டு கையை உயர்த்தி அவுட் வழங்கினார். ஆனால் அதை ஃபெவிலியனில் பார்த்து இலங்கைப் பயிற்சியாளர் ஜெயசூர்யா “என்ன தம்பி செஞ்சுட்டு வர” என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏனெனில் ரீப்ளேவில் பார்க்கும் போது பந்து லியனாகேவின் பேட்டில் படவே இல்லை. அந்த வகையில் இந்தியாவுக்கு லியாங்கே தனது விக்கெட்டை இலவசமாக கொடுத்து வெளியேறியது இலங்கை ரசிகர்களையும் கடுப்பாக்கியது.

Advertisement