என்ன எல்லாமே நான் தான் பண்ணனுமா? வாஷிங்டன் சுந்தரிடம் செல்லமாக கோபித்த ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

Sundar-and-Rohit
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்தது. பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கி முன்னேறியது.

- Advertisement -

பின்னர் இறுதிக்கட்டத்தில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.5 ஓவர்களில் இந்திய அணியும் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக முதல் போட்டி சமனில் முடிவடைந்தது. நேற்றைய முதலாவது ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் கிடையாது என்பதால் இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இல்லாமல் போட்டி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது.

எளிதாக வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இலங்கை அணி சார்பாக ஏழாவது வீரராக களமிறங்கிய துனித் வெல்லாலகே 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 67 ரன்கள் குறித்து அந்த அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாஷிங்க்டன் சுந்தரிடம் செல்லமாக கோபித்துக் கொண்ட ஒரு விடயம் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தைக் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது 29-வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் துனித் வெல்லாலகேவிற்கு எதிராக எல்.பி.டபிள்யு கேட்டார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் அதற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா ஆட்டத்தை பார்த்தா அந்த விடயம் நல்லாவே தெரியுது.. அவரை மாதிரி கேப்டன் தான் வேனும் – ரசிகர்கள் பாராட்டு

இதனால் டி.ஆர்.எஸ் முடிவை எடுக்கலாமா? என்று யோசித்த வாஷிங்க்டன் சுந்தர் ரோகித் சர்மாவை பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது அதனை கவனித்த ரோஹித் சர்மா : சுந்தரை பார்த்து “என்ன நீ சொல்லு? என்னை ஏன் பார்க்கிறாய்? உனக்காக நான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா? என்பது போல கூறினார். பின்னர் கே.எல் ராகுலிடம் கேட்டு விட்டு டி.ஆர்.எஸ் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து சிரித்தபடி நகர்ந்து விட்டார்.

Advertisement