தெ.ஆ மண்ணில் சரித்திரம் படைக்க அதை மட்டும் செய்ங்க.. மீதியை பவுலர்ஸ் பாத்துப்பாங்க.. ஹர்பஜன் அட்வைஸ்

Harbhajan Singh 4
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகவும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் நிறைந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 1992 முதல் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் விளையாடிய எந்த தொடரிலும் இந்தியா வெற்றியை பதிவு செய்ததில்லை. அதிகபட்சமாக 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் கடுமையாக போராடி 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக 2021இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் கையில்:
எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றி சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி தென்னாபிரிக்காவை சந்திக்க உள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

அதனால் பேட்ஸ்மேன்கள் அங்கே நிலைத்து நின்று பெரிய ரன்கள் குவிப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை இந்தியா வெல்ல வேண்டுமெனில் இந்திய பேட்ஸ்மேன்கள் உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி எப்படியாவது முதல் இன்னிங்ஸில் 350க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதை செய்தாலே ஷமி, பும்ரா உள்ளிட்ட நம்முடைய தரமான பவுலர்கள் வெற்றிக்கான மீதி வேலையை பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்தத் தொடரில் வெல்வதற்கு இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். அங்குள்ள பிட்ச்களில் நாம் நன்றாக பேட்டிங் செய்தால் இம்முறை தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு ஏற்படும்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பைக்கு முன்னதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் – டூபிளெஸ்ஸிஸ்

“ஏனெனில் நம்முடைய பவுலிங் நன்றாக இருக்கிறது. ஷமி நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரை போலவே நம்மிடம் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் தரமாக இருக்கிறார்கள். இருப்பினும் உமேஷ் யாதவ் ஏன் இத்தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. இத்தொடரில் தென்னாபிரிக்காவும் நல்ல அணியாக இருக்கிறது. ஆனால் நாங்கள் விளையாடிய காலங்களில் இந்தியாவை அச்சுறுத்திய அளவுக்கு தற்போதைய தென்னாப்பிரிக்க அணி இல்லை. எனவே இந்தியா வெற்றி பெறுவதற்கு முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 350 ரன்கள் எடுப்பது அவசியமாகும்” என்று கூறினார்.

Advertisement