டி20 உலககோப்பைக்கு முன்னதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் – டூபிளெஸ்ஸிஸ்

Faf
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான 39 வயதாகும் டூபிளெஸ்ஸிஸ் கடந்த 2011-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 143 ஒருநாள் போட்டிகள், 69 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 39 வயதாகும் அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்படுவது மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் 10 ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடி வரும் டூபிளெஸ்ஸிஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த செய்தி யாதெனில் : அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் அவர் மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி இடம்பெற வாய்ப்புள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் நிச்சயம் சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

இதுகுறித்து அணி நிர்வாகத்திடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வருகிறேன். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் நான் இடம் பிடித்தால் சரியாக இருக்கும் என்று தெரிந்தால் நிச்சயம் அந்த தொடரில் பங்கேற்று விளையாடுவேன் என்று அறிவித்துள்ளார்.

- Advertisement -

39 வயதான டூபிளெஸ்ஸிஸ் இன்றளவும் மிகவும் ஃபிட்டான கிரிக்கெட்டர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக தனது பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் என்னுடைய உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். ஏனெனில் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே அதற்கான பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் அம்பியா இருந்த அவர்.. இந்தியாவுக்காக அந்நியனா அடிப்பாருன்னு எதிர்பாக்கல.. ஏபிடி பாராட்டு

தற்போது சற்று வயது அதிகமானாலும் இன்றளவும் என்னுடைய உடற்பகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். இல்லையெனில் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் போட்டியிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 35 ரன்கள் சராசரியுடன் 1528 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 10 அரை சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement