ஐபிஎல் தொடரில் அம்பியா இருந்த அவர்.. இந்தியாவுக்காக அந்நியனா அடிப்பாருன்னு எதிர்பாக்கல.. ஏபிடி பாராட்டு

AB De Villiers 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் பாண்டியா காயமடைந்துள்ளதால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் 2023 உலகக்கோப்பை உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகள் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்டுகளால் அடித்து நொறுக்கும் அவர் பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ள காரணத்தால் மட்டுமே தற்போது டி20 அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்ஐபிஎல் தொடரில் தாம் விளையாடிய காலங்களில் சூரியகுமார் யாதவ் இந்தளவுக்கு அதிரடியாக விளையாடவில்லை என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் நாளடைவில் அனுபவத்தால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடுவதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவரைப் பார்த்து நான் ஆச்சரியமடைகிறேன். ஏனெனில் நான் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது அவர் இது போல் விளையாடி பார்த்ததில்லை”

- Advertisement -

“இருப்பினும் அவரைப் போன்ற வீரர்கள் வெவ்வேறு வழிகளை ஆராய்ந்து யாரும் காணாத வீரராக வளர்வதை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் பார்த்த வரை ஐபிஎல் தொடரில் முதல் சில வருடங்களில் சூரியகுமார் யாதவ் மிகவும் கவனமாக விளையாடுவார். எப்போதும் ஒரு இன்னிங்ஸை உருவாக்குவதில் உறுதியாக இருப்பார். இப்போதும் அவர் அதை செய்கிறார்”

இதையும் படிங்க: இந்தியாவின் தலையீடு அம்பலமானதா? 2023 உ.கோ நடைபெற்ற 5 மைதானங்களுக்கு ரேட்டிங் வழங்கிய ஐசிசி

“ஆனால் தற்போது ஒரு போட்டியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பை தேடுவதற்கான திறமை அவரிடம் உள்ளது. அங்கே தான் ஒரு பேட்ஸ்மேன் மிகவும் ஆபத்தானவராக இருப்பார். இப்போதெல்லாம் அவர் தனக்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை அப்படியே பயன்படுத்தி எடுத்துக் கொள்கிறார்” என்று கூறினார். அப்படி ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டுகளைப் பெற்றுள்ள சூரியகுமார் யாதவ் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement