IND vs PAK : ஷாஹீன் அப்ரிடியை சமாளிக்க புதிய யுக்தியுடன் பயிற்சியை மேற்கொண்ட இந்திய வீரர்கள் – விவரம் இதோ

Shaheen-Afridi
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த வேளையில் தற்போது சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் இறுதியில் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இவ்வேளையில் இந்த சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகப்பெரும் சவாலை சந்தித்து இருந்தனர்.

- Advertisement -

போட்டியின் ஆரம்பத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை வீழ்த்திய ஷாஹீன் அப்ரிடி பின் கட்டத்தில் பாண்டியா, ஜடேஜா ஆகியோரையும் வீழ்த்தி அசத்தினார். அவரது வேகப்பந்து வீச்சுக்கு எதிராக துவக்க ஓவர்களிலேயே இந்திய அணி விக்கெட்டுகளை இழப்பதால் தற்போது இந்த போட்டியில் எவ்வாறு இந்திய அணியின் வீரர்கள் சமாளிக்க போகிறார்கள் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

ஏனெனில் அந்த அளவிற்கு தனது பந்துவீச்சின் மூலம் இந்திய டாப் ஆர்டர் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடியை சமாளிக்க இந்திய வீரர்கள் சில புதிய யுத்திகளுடன் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியை சமாளிக்க தங்களுடைய ஸ்டான்ஸை மாற்றி அதாவது கால்களின் நகர்வுகளை சற்று மாற்றியமைத்து அதோடு இன் ஸ்விங்கிங் பந்துகளை த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் மூலம் வீசவைத்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs PAK : எங்களோட இந்த ஸ்ட்ரென்த்க்கு எதிரா இந்திய அணி சமாளிக்கிறது கஷ்டம் தான் – முகமது ரிஸ்வான் பேட்டி

இதன்மூலம் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சூழ்நிலையை சமாளித்து துவக்க ஓவர்களை தாக்குப்பிடித்து அதன் பிறகு அதிரடியை காட்டவும் பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். எது எப்படி இருப்பினும் இன்றைய போட்டியில் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக இந்திய அணியின் வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள்? என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement