வீடியோ : நீங்க என்ன ஆடுறீங்க? எங்களை பாருங்க. ஆண்கள் அணியை காட்டிலும் பெண்கள் அணி பெற்ற – உலக சாதனை வெற்றி

Womens India Harmanpreet Kaur Smriti Mandhana
- Advertisement -

2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டிசம்பர் 9ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா வழக்கம் போல எளிதான வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் டிசம்பர் 11ஆம் தேதியான நேற்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் 2வது போட்டி நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 187/1 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு அலிசா ஹீலி ஆரம்பத்திலேயே 15 (15) ரன்களில் ஆட்டமிழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 158 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கிய பெத் மூனி 13 பவுண்டரியுடன் 82* (54) ரன்களும் தஹிலா மெக்ராத் தனது பங்கிற்கு 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 70* (51) ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதனால் மீண்டும் தோல்வி உறுதியென்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது 188 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்டிய இளம் வீராங்கனை சபாலி வர்மா 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 (23) ரன்கள் விளாசி ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 4 (4) ரன்களில் நடையை காட்டினார். அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஒருபுறம் நங்கூரமாக நிற்க மறுபுறம் வெளுத்து வாங்கிய ஸ்மிருத்தி வந்தனா அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

அபார வெற்றி:

3வது விக்கெட்டுக்கு முக்கியமான 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் முக்கிய நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 21 (22) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட மந்தனா 9 பவுண்டரி 4 சிக்சருடன் 79 (49) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அப்போது வந்து தீப்தி சர்மாவும் 2 (4) ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவுக்கு ரிச்சா கோஸ் 3 சிக்ஸருடன் அதிரடியாக 26* (13) ரன்கள் எடுத்தால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

மேகன் ஸ்கட் வீசிய அந்த ஓவரில் ரிச்சா கோஸ் 1, 1, 2, 1 என 5 ரன்கள் எடுத்ததை விட 2வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட தேவிகா வாடியா கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்ததால் 20 ஓவர்களில் இந்தியாவும் சரியாக 187/5 ரன்கள் எடுத்தது. அதனால் சம்னில் முடிந்த இப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட ரிச்சா கோஸ் அடுத்த பந்தில் அவுட்டான நிலையில் 3வது பந்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் சிங்கள் எடுத்தார்.

ஆனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரியையும் சிக்ஸரையும் பறக்க விட்ட மந்தனா கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்ததால் இந்தியா 20/1 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 21 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசிய நட்சத்திர வீராங்கனை ரேணுகா சிங் முதல் பந்தில் அலிசா ஹீலியிடம் பவுண்டரி கொடுத்தாலும் அடுத்த பந்தில் சிங்கிள் கொடுத்து 3வது பந்தில் ஆஸ்லே கார்ட்னரை அவுட் செய்தார். மேலும் முக்கியமான 4வது பதில் சிங்கிள் மட்டுமே கொடுத்த அவர் அடுத்த 2 பந்துகளில் அலிசா ஹீலியிடம் 4, 6 என 10 ரன்களை கொடுத்தாலும் ஆஸ்திரேலியா 16/1 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: IND vs BAN : 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பாக்கலாம்?

அப்படி நகத்தை கடிக்கும் அளவுக்கு பரபரப்பாக த்ரில்லாக நடைபெற்று முடிந்த அப்போட்டியை பார்த்த இந்திய ரசிகர்கள் பயப்படாமல் அதிரடியாக விளையாடி வென்ற மகளிர் அணியை ஆடவர் அணியும் பின்பற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். மேலும் இப்போட்டியில் 20 ரன்களை எடுத்த இந்தியா சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது. இதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள இந்தியா டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Advertisement