IND vs BAN : 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பாக்கலாம்?

IND-vs-BAN
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது முதலில் அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. அதன்படி கடந்த நான்காம் தேதி துவங்கிய இந்த தொடரானது டிசம்பர் 10-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

IND vs BAN

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. அதன்படி நாளை மறுதினம் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளும் எந்தெந்த தேதிகளில் நடைபெறுகிறது? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்? எந்த சேனலில் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம்? என்பது குறித்த சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

sony

அதன்படி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை சட்டகிராம் நகரில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை டாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கும். அதோடு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் சோனி குழும தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கலாம். நேரலையில் ஆன்லைன் மூலம் காண விரும்புவோர் பிரைம் ஆப்பின் மூலம் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கார், வீடு, பணம் மட்டுமில்ல கேப்டனும் நீங்கதா. எங்க நாட்டுக்கு வாங்க – சஞ்சு சாம்சனை அழைக்கும் வெளிநாட்டு அணி

ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த வேளையில் இந்த டெஸ்ட் தொடரிலாவது நிச்சயம் அவர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement