கார், வீடு, பணம் மட்டுமில்ல கேப்டனும் நீங்கதா. எங்க நாட்டுக்கு வாங்க – சஞ்சு சாம்சனை அழைக்கும் வெளிநாட்டு அணி

Samson
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலிலே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன்களிலேயே மிகவும் இளம் வயது வீரராக இருந்த அவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட இந்திய அணியானது 2015-ஆவது ஆண்டிலேயே அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் அறிமுக வாய்ப்பை வழங்கியது.

Samson

- Advertisement -

ஆனாலும் 2015-ல் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் விளையாட ஆரம்பித்த சமயத்தில் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்தால் அவருக்கு தேவையான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தற்போது ரிஷப் பண்ட், இஷான் கிஷன் என அடுத்த கட்ட விக்கெட் கீப்பர்கள் வந்து விட்டதாலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

டி 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த வாய்ப்பும் சஞ்சு சாம்சனுக்கு மறுக்கப்பட்டது. ஆனாலும் தனது வாய்ப்புக்காக அவர் தொடர்ந்து காத்துக்கொண்டு தான் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்படும் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக அணியையும் வழிநடத்தி வருகிறார்.

Sanju-Samson

இந்நிலையில் இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் வேளையில் அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகமானது தற்போது சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து நாட்டின் குடியுரிமையுடன் அங்கு குடியேற அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியான அறிக்கையில் : நீங்கள் அயர்லாந்துக்கு வாருங்கள் உங்களை நாங்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்கிறோம்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவரைப் போன்ற ஒரு அறிய வகை திறமைசாலி எங்களுக்கு தேவை. நாங்கள் எங்களது தேசிய அணிக்காக அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேனை தேடுவதோடு மட்டுமின்றி ஒரு கேப்டனும் எங்களுக்கு தேவை என்று நினைக்கிறேன். அந்த வகையில் இந்திய அணியை விடுத்து அயர்லாந்து அணிக்காக விளையாடுமாறு கேட்டுக் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஜனவரியில் எழுதி வைத்து டிசம்பரில் வைராக்கியத்தால் சாதித்த இந்திய வீரர் – வைரலாகும் பழைய பதிவு, பாராட்டும் ரசிகர்கள்

மேலும் சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து நாட்டின் குடியுரிமையை தாண்டி, வீடு, கார், இந்திய மதிப்பில் அவருக்கு நிகரான சம்பளம் என அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக அயர்லாந்து தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர்களது இந்த வேண்டுகோளை சஞ்சு சாம்சன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement