ஜனவரியில் எழுதி வைத்து டிசம்பரில் வைராக்கியத்தால் சாதித்த இந்திய வீரர் – வைரலாகும் பழைய பதிவு, பாராட்டும் ரசிகர்கள்

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை நழுவ விட்ட இந்தியா கடைசி போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்பட்டு 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த இந்தியா அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மா வெளியேறிய காரணத்தால் துணை கேப்டன் கேஎல் ராகுல் அணியை வழி நடத்துகிறார்.

அது போக ரவீந்திர ஜடேஜா போன்ற காயமடைந்த வீரர்களுக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி போன்ற வீரர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் 12 வருடங்கள் கழித்து இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் 19 வயதிலேயே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் விக்கெட் எடுக்காமல் சுமாராக செயல்பட்டதால் அடுத்த போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

வைராக்கிய வெற்றி:
அதன் பின் விதியைப் போல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2013 முதல் 2018 வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் பெற்ற கணிசமாக வாய்ப்புகளில் சொதப்பலாகவே செயல்பட்டார். அதனால் வழக்கம் போல இளம் வீரர்களை தேடிய பயணத்தை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்த நிலையில் மனம் தளராத அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வந்தார்.

அதில் 2019 ரஞ்சி கோப்பையில் 63 விக்கெட்டுகளை எடுத்து ஒரு சீசனில் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் கேப்டனாக தன்னுடைய சவுராஷ்ட்ரா அணிக்கு முதல் முறையை கோப்பையை வென்று கொடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் வென்று காட்டினார். அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அவரை புறக்கணிக்க முடியாத தேர்வுக்குழு தாமாக முன்வந்து இந்தியாவுக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்துள்ளது. அதனால் 19 வயதில் அறிமுகமான அவர் 12 வருடங்கள் கழித்து தற்போது 31 வயதில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

- Advertisement -

இதனால் அவரை மனதார பாராட்டும் ரசிகர்கள் கடந்த ஜனவரி மாதம் போட்ட ஒரு ட்விட்டை தோண்டி எடுத்து அவரது வைராக்கியத்தை பார்த்து ஆச்சரியமடைந்து மேலும் பாராட்டுகிறார்கள். அதாவது கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதியன்று “அன்பான சிவப்பு நிற பந்து எனக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடு. அதில் உன்னை நான் பெருமைப்படுத்துவேன். அது சத்தியம்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயதேவ் உனட்கட் பதிவிட்டுள்ளார்.

அப்போது கூட நீங்கள் முடிந்து போனவர் உங்களுக்கு வாய்ப்பில்லை என்று நிறைய ரசிகர்கள் அவரை கிண்டலடித்து பதிலளித்தார்கள். ஆனால் அதற்காக கொஞ்சம் கூட முகம் சுளிக்காத அவர் இல்லை இன்னும் நான் முடிந்த விடவில்லை என்று சிரித்த முகத்துடன் அவர்களுக்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க: அரிதான வீடியோ : அதே ஸ்டைல் மாறாமல் – 53 வயதிலும் உலகத் தரமான ரசீத் கானை தெறிக்க விட்ட பிரையன் லாரா

அப்படி கடந்த ஜனவரியில் ட்விட்டரில் எழுதிய அவர் தொடர் போராட்டத்தால் இன்று 10 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் இந்திய அணிக்கு தேர்வாகி வைராக்கியத்தில் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் நம்பிக்கையுடன் உண்மையாக கடினமாக தொடர்ந்து உழைத்து போராடினால் நிச்சயம் வெற்றி தாமாக வரும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார் என்றே கூறலாம்.

Advertisement