- Advertisement -
இந்திய கிரிக்கெட்

75/0 டூ 230 ரன்ஸ்.. போராடிய துபே, சொதப்பிய அர்ஷ்தீப்.. அடங்க மறுத்த இலங்கை.. இந்தியா சொதப்பியது எப்படி?

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்கியது. கொழும்பு நகரில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அவிஸ்கா பெர்னாண்டோ ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் ஒரு ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் நிசாங்கா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த குசால் மெண்டிஸ் 14, சமரவிக்ரமா 8, கேப்டன் அசலங்கா 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அசத்தலாக விளையாடிய பதும் நிஷாங்காவும் 56 ரன்களில் அவுட்டானதால் 101/5 என இலங்கை தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஜனித் லியாங்கே மற்றும் துணித் வெல்லலேகே நிதானமாக விளையாடினர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
6வது விக்கெட்டுக்கு முக்கியமான 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் லியாங்கே 20 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ஹசரங்கா 24, அகிலா தனஞ்செயா 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய வெல்லலாகே கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 67* (65) ரன்கள் விளாசினார்.

அதனால் 50 ஓவரில் இலங்கை 230 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவித்தார். அவருடன் 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய சுப்மன் கில் 16 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (47) ரன்களில் ரோகித் சர்மா அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் அவுட்டானார். அதனால் 87/3 என தடுமாறிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது விராட் கோலி 24 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த ஓவரிலேயே ஸ்ரேயாஸ் 23 ரன்களில் அவுட்டானார்.

அதைத்தொடர்ந்து கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினர். ஆனால் முக்கிய நேரத்தில் ராகுல் 31, அக்சர் படேல் 33 ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அப்போது 8வது இடத்தில் களமிறங்கி விளையாடிய சிவம் துபே அதிரடியாக 25 ரன்கள் எடுத்ததால் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: என்னங்க ஆடுறாரு அவரு.. சுப்மன் கில்லுக்கு பதிலா அவரை சேருங்க.. ரசிகர்கள் ஆதங்கம் – விவரம் இதோ

ஆனால் முக்கிய நேரத்தில் அவரையும் அவுட்டாக்கிய அசலங்கா அடுத்ததாக வந்த அர்ஷ்தீப்பை டக் அவுட்டாக்கினார். குறிப்பாக 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட போது அர்ஷ்தீப் சிங்கிள் எடுக்க முயற்சிக்காமல் அதிரடியாக விளையாட முயற்சித்து வெற்றியை கோட்டை விட்டார். அதனால் 50 ஓவரில் இந்தியா 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி சமனில் முடிந்தது. அதே காரணத்தால் இலங்கைக்கு எதிராக 100 வெற்றிகளை பெற்ற முதல் அணியாக உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு தள்ளிப்போனது. இலங்கைக்கு அதிகபட்சமாக அசலங்கா ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -