இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள், 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ள சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனாலும் சமீபகாலமாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 35 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரிகளுடன் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக 45 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே இந்திய அணியின் தொடர் வாய்ப்புக்காக காத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் வருங்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லை முன்னிறுத்தி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதையும் படிங்க : லாரா சாதனையை பசங்க உடைச்சுருவாங்க.. இது கிடைச்சுருந்தா அப்போவே நான் 400 ரன்ஸ் அடிச்சுருப்பேன்.. சேவாக் பேட்டி
இந்நிலையில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரை இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி அவரை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவருக்கு பதிலாக ருதுராஜிக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



