இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளராக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பொறுப்பேற்றது முதல டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை இங்கிலாந்து பின்பற்றி வருகிறது. அதைப் பின்பற்றி சொந்த மண்ணில் எதிரணிகளை தெறிக்க விட்ட இங்கிலாந்து ஃபிளாட்டான ஃபிட்ச்களை கொண்ட பாகிஸ்தானிலும் வெற்றி வகை கூறியது.
இருப்பினும் சவாலான நியூசிலாந்து மண்ணில் அந்த அணியால் வெற்றி காண முடியவில்லை. அதை விட இந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று இங்கிலாந்து அடம் பிடித்ததே முக்கிய காரணமானது.
சேவாக் கருத்து:
அப்போது இங்கிலாந்து சொல்லும் பஸ்பால் அணுகுமுறையை பல வருடங்களுக்கு முன்பே விரேந்தர் சேவாக் வெற்றிகரமாக விளையாடியதாக இந்திய ரசிகர்கள் தெரிவித்தனர். அத்துடன் அனைத்து நேரமும் அதிரடியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என்ற விமர்சனங்களை இங்கிலாந்து அணி சந்தித்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார்.
அத்துடன் ஐபிஎல், டெல்லி பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் தங்களது காலத்தில் இருந்திருந்தால் 270 பந்துகளில் 300க்கு பதிலாக 400 ரன்கள் அடித்திருப்பேன் என்றும் சேவாக் கூறியுள்ளார். எனவே தற்போதுள்ள வீரர்கள் பிரைன் லாராவை மிஞ்சி 400 ரன்களை கூட எளிதாக அடிப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓவருக்கு 5 ரன்கள் எடுத்து விளையாடுகிறது”
“எங்களுடைய காலங்களில் ஆஸ்திரேலியா தான் ஓவருக்கு 4 ரன்கள் அடிப்பார்கள். நீங்கள் அட்டாக் செய்து விளையாடும் போது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். என்னுடைய பையன் டெல்லி அண்டர்-16 அணிக்காக விளையாடுகிறார். நாங்கள் 18 வயதில் இருந்த போது ஐபிஎல் இல்லை. ஆனால் தற்போதைய வீரர்களுக்கு ஐபிஎல், டிபிஎல் போன்ற தொடர்கள் வாய்ப்பு கொடுக்கின்றன”
இதையும் படிங்க: ஒட்டுமொத்த இலங்கை அணியும் சேர்ந்து கூட அவரை பிடிக்க முடியல.. விராட் கோலி வைத்து வெளியான – சுவாரசிய தகவல்
“எனவே யாராவது ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் ஆட்டத்தை மெருகேற்றினால் அதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? அனைத்தையும் விட ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகமாக பார்ப்பதையே நாம் விரும்புகிறோம். நான் 270 பந்துகளில் முச்சதம் அடித்தேன். ஆனால் இப்போதுள்ள குழந்தைகள் அதே பந்துகளை எதிர்கொண்டால் 400 ரன்களை கூட அடிப்பார்கள்” என்று 2024 டிபிஎல் துவக்க விழாவில் பேசினார்.



