CWC 2023 : வெற்றியை மட்டுமே கண்டு வந்த ஆஸிக்கு.. 21ஆம் நூற்றாண்டில் காணாத தோல்வியை பரிசளித்த இந்தியா

IND vs AUS CWC
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 200 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஸ்விங் வேகத்தில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது அடுத்ததாக ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினர். அந்த வகையில் 38 ஓவர்கள் வரை நின்று 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் தோல்வி:
இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் ஃபினிஷிங் செய்த ராகுல் 97* ரன்கள் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக குறைந்த இலக்கை வைத்தே கிட்டத்தட்ட கைக்கு கிடைத்த வெற்றியை ஆஸ்திரேலியா நழுவ விட்டது. இதை விட இதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் உலகக்கோப்பை போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதாவது கடைசியாக கடந்த 1996 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன் பின் இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2003 உலக கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானையும் 2007 உலக கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்திருந்தது.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு இதுவே காரணம். சுட்டிக்காட்டிய – சச்சின் டெண்டுல்கர்

அதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற 2011 உலக கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் ஜிம்பாப்பேவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2015 உலக கோப்பையில் சொந்த மண்ணில் நடைபெற்ற தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2019 உலகக்கோப்பையில் தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்த இந்தியா 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் முதல் போட்டியிலே ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியை பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement