2 வீரர்களின் கேரியரை முடித்த பிசிசிஐ? தெ.ஆ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்ததாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்கள். குறிப்பாக தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்றில் இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றி புதிய சரித்திரம் படைப்பதற்காக களமிறங்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் அணி:
ஆனால் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அஜிங்க்ய ரகானே இத்தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் முக்கிய வீரராக இருந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய போதிலும் அதன் பின் சதமடிக்காமல் இருந்ததால் நீக்கப்பட்டார்.

ஆனாலும் மனம் தளராமல் போராடி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கம்பேக் கொடுத்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சொதப்பியதால் தற்போது மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார். அவரைப் போலவே மற்றொரு சீனியர் வீரர் புஜாராவும் இத்தொடரில் தேர்வு செய்யப்படாததால் அந்த 2 நட்சத்திர சீனியர் வீரர்களின் கேரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் ரோகித் தலைமையில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், கில் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் தேர்வாகியுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பாரத் கழற்றி விடப்பட்டு இசான் கிசான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வாகியுள்ளனர். அவர்களுடன் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் தாக்கூர், முகமது சிராஜ், முஹம்மது ஷமி, முகேஷ் குமார் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விராட், ரோஹித் இல்லை.. தெ.ஆ டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணி இதோ

இந்த அணிக்கு பும்ரா துணை கேப்டனாக தேர்வாகியுள்ள நிலையில் ஷமி காயத்தை பொறுத்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கைக்வாட், இஷான் கிசான், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், சர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முஹம்மது ஷமி, முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா

Advertisement