விராட், ரோஹித் இல்லை.. தெ.ஆ டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணி இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலககோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 டி20 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடர்களில் விளையாட உள்ளது.

அதற்காக தனித்தனியாக 3 விதமான இந்திய அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

டி20 அணி:
இருப்பினும் அத்தொடரில் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என அந்த 2 ஜாம்பவான் வீரர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. அதே போல ராகுல், பும்ரா போன்றவர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய டி20 இந்தியாவை வழி நடத்தி வரும் சூரியகுமார் யாதவ் இத்தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் யசஸ்வி ஜெய்ஸ்வால், கில், இஷான் கிசான், ருதுராஜ், ரிலாக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் அதிரடி வீரர்கள் இத்தொடரில் மீண்டும் தேர்வாகி அசத்தியுள்ளனர். அவர்களுடன் சற்று அனுபவம் நிறைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாமல் இருந்து வரும் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா தென்னாப்பிரிக்க தொடரிலும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இந்த அணியில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் மட்டும் தேர்வாகியுள்ள நிலையில் ஸ்பின்னர்களாக ரவி பிஸ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் வேகப்பந்து வீச்சு துறையில் நட்சத்திர வீரர் முகமது சிராஜுடன் காயத்திலிருந்து குணமடைந்த தீபக் சஹார் நீண்ட நாட்கள் கழித்து தேர்வாகியுள்ளார். அவர்களுடன் அர்ஷிதீப், முகேஷ் குமார் ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாதித்த தமிழக வீரர்.. கழற்றி விடப்பட்ட நட்சத்திரம்.. தெ.ஆ ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

2023 தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணி பின்வருமாறு:
சூரியகுமார் யாதவ் (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிசான், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷிதீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹார்

Advertisement