சாதித்த தமிழக வீரர்.. கழற்றி விடப்பட்ட நட்சத்திரம்.. தெ.ஆ ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டி20 தொடரை முடித்துக் கொண்டு அடுத்ததாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் திரும்புவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த நிலைமையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேர்வு குழுவினர் ஓய்வு கொடுத்துள்ளதால் இத்தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒருநாள் அணி:
அதனால் கேஎல் ராகுல் கேப்டனாக தலைமை தாங்கும் அந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார். அதை விட டி20 கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அபாரமாக விளையாடி தம்முடைய திறமைகளை காண்பித்த ரிங்கு சிங் முதல் முறையாக தேர்வாகியுள்ளார்.

அதே போல கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியா ஏ அணிக்காக சதமடித்து உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாட இத்தொடரில் தேர்வாகியுள்ளார். அது போக ரஜத் படிதார் முதல் முறையாக தேர்வாகியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் சஹால் ஆகியோர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கின்றனர்.

- Advertisement -

மேலும் காயத்திலிருந்து குணமடைந்த தீபக் சஹர் தேர்வாகியுள்ள நிலையில் ருதுராஜ், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் இத்தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஸ்பின்னர்களாக தேர்வாகி அசத்தியுள்ளனர். அதே போல முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

2023 தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இதோ:
கேஎல் ராகுல் (கேப்டன் – கீப்பர்), ருதுராஜ் கைக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (கீப்பர்), அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், அர்ஷிதீப் சிங், தீபக் சஹர், ஆவேஷ் கான்

Advertisement