டி20 உ.கோ முடிந்ததும் இந்தியா களமிறங்கும் 2 புதிய கிரிக்கெட் தொடர் – எங்கே, எப்போது, முழு அட்டவணை இதோ

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சி போட்டிகளில் விளையாடி தயாராகியுள்ளனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியும் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

ஆனால் பும்ராவுக்கு பதிலாக தேர்வாகி பயிற்சிப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முஹம்மது ஷமி வந்துள்ள நம்பிக்கையில் குறைகளை நிறையாக்கி வெற்றி காண்பதற்காக தயாராகியுள்ள இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை மெல்போர்ன் நகரில் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தோல்வியைப் பரிசளித்து சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு செல்லவிடாமல் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த அந்த அணிக்கு இம்முறை பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

புதிய தொடர்கள்:
அந்த வகையில் லீக் சுற்றில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொண்டு தேவையான வெற்றிகளைப் பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற போராட தயாராகியுள்ள இந்தியா பைனலில் கோப்பையை வென்று வெற்றியுடன் நாடு திரும்ப முயற்சிக்க உள்ளது. மேலும் இத்தொடரில் கோப்பையை வென்றாலும் வெல்லவிட்டாலும் நவம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பாக பக்கத்திலிருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் களமிறங்குகிறது.

INDvsNZ 1

அதற்கான முழுமையான அட்டவணை இதோ (இந்திய நேரப்படி):
முதல் டி20 : நவம்பர் 18, மதியம் 12 மணி, முதல் டி20, நியூசிலாந்து V இந்தியா, வெலிங்டன்
2வது டி20 : நவம்பர் 20, மதியம் 12 மணி, நியூசிலாந்து V இந்தியா, மௌன்ட் மௌங்கனி
3வது டி20 : நவம்பர் 22, மதியம் 12 மணி, நியூசிலாந்து V இந்தியா, நேப்பியர்

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டி : நவம்பர் 25, காலை 7 மணி, நியூசிலாந்து V இந்தியா, ஆக்லாந்து
2வது ஒருநாள் போட்டி : நவம்பர் 27, காலை 7மணி நியூசிலாந்து V இந்தியா, ஹமில்டன்
3வது ஒருநாள் போட்டி : நவம்பர் 30, காலை 7 மணி, நியூசிலாந்து Vஇந்தியா கிரைஸ்ட்சர்ச்

IND-vs-BAN

வங்கதேச சுற்றுப்பயணம்:
அந்த வகையில் நவம்பர் 30ஆம் தேதி நிறைவுக்கு வரும் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக 4 நாட்கள் இடைவெளியில் அண்டை நாடான வங்க தேசத்துக்கு சென்று அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு அங்கு விளையாடிய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 2 – 1 (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் தோற்ற பின் நடைபெற்ற 1 டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. அதன்பின் 7 வருடங்கள் கழித்து தங்களது நாட்டுக்கு வரும் இந்தியாவை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக அறிவித்துள்ள வங்கதேச வாரியம் இந்த வருடம் நடைபெறும் சுற்றுப்பயணம் தாக்கா மற்றும் சட்டோகிராம் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனக் கூறியுள்ளது.

- Advertisement -

அதில் குறிப்பாக அக்டோபர் 14, 22 ஆகிய தேதிகளில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ள இந்தியா அந்த 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாங்க எப்படி விளையாடனும்னு சொல்ல நீங்க ஆள் இல்ல – இந்தியாவுக்கு 2 ஜாம்பவான்கள் சுளீர் பதிலடி

வங்கதேசம் வெளியிட்டுள்ள இந்திய சுற்றுப் பயணத்தின் அட்டவணை இதோ (இந்திய நேரம்):
முதல் ஒன்டே : டிசம்பர் 4, மதியம் 12.30 மணி, வங்கதேசம் V இந்தியா, தாக்கா
2வது ஒன்டே : டிசம்பர் 7, மதியம் 12.30 மணி, வங்கதேசம் V இந்தியா, தாக்கா
3வது ஒன்டே : டிசம்பர் 10, மதியம் 12.30 மணி, வங்கதேசம் V இந்தியா, தாக்கா

முதல் டெஸ்ட் : டிசம்பர் 14, காலை 9.30 மணி, வங்கதேசம் V இந்தியா, சட்டகிராம்
2வது டெஸ்ட் : டிசம்பர் 22, காலை 9.30 மணி, வங்கதேசம் V இந்தியா, தாக்கா

Advertisement