IND vs PAK : என்னையா வேணாம்ன்னு சொன்னீங்க? மாஸ் கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல் – பாக் பவுலர்களை பந்தாடிய கிங் கோலி

KL Rahul Virat Kohli
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கிய 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சாகின் அப்ரிடி போன்ற தரமான பாகிஸ்தான் பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் அடித்து கடந்த போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

அதை தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் வந்த மழை மீண்டும் போட்டியை ரத்து செய்தது. இருப்பினும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டதால் செப்டம்பர் 11ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5 மணியளவில் மீண்டும் துவங்கிய போட்டியில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் பாகிஸ்தான் பவுலர்களை நிதானமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அதிலும் குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய கேஎல் ராகுல் நீண்ட நாட்கள் கழித்து தம்முடைய நேர்த்தியான கிளாஸ் பேட்டிங் ஸ்டைலை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். அவருக்கு நிகராக விராட் கோலி தனது பங்கிற்கு மிகவும் பிடித்த பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 50 ரன்கள் கடந்து இந்தியாவை வலுப்படுத்தினார். அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடியில் கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.

குறிப்பாக ஏற்கனவே தடவலான பேட்டிங் செய்து விமர்சனங்களுக்குள்ளான அவர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் களமிறங்கக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதே போல சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வந்ததால் ராகுலும் இந்திய அணியில் விளையாட கூடாது என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

ஆனால் மோசமான காலங்களை கடந்து 2023 உலகக் கோப்பைக்கு முன் ஃபார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கம்பேக் போட்டியில் சதமடித்த அவர் தாம் எப்போதுமே கிளாஸ் நிறைந்த வீரர் என்பதை நிரூபித்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். அதே போல மறுபுறம் நேரம் செல்ல அதிரடியாக விளையாடிய விராட் கோலியின் சதமடித்து பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடி இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார்.

இதையும் படிங்க: IND vs PAK : ரிசர்வ் டே போட்டியில் ஒரு ஓவர் கூட ஹாரிஸ் ரவுப் பந்துவீசாதது ஏன்? – வெளியான தகவல்

அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய இந்த ஜோடியில் விராட் கோலி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 122* (94) ரண்களும் கேஎல் ராகுல் 12 பவுண்டரி2 சிக்சருடன் 111* (106) ரங்களின் எடுத்தனர். அவர்களது அபாரமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்தியா 356/2 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, சடாப் கான் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இதை தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை பாகிஸ்தான் துரத்தி வருகிறது.

Advertisement