சவாலான பிட்ச்சில் ஆட்டிப்பார்த்த ஆஸி.. போராடி திருப்பி அடித்த இந்தியா.. வெல்லப்போவது யார்?

IND vs AUS 5th
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியாவை மீண்டும் 4வது போட்டியில் தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்று 2023 உலகக்கோப்பையில் சந்தித்த தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 21 (15) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ருதுராஜ் கைக்வாட் 10 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்புறம் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் ரிங்கு சிங்கும் 6 (8) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

அதனால் 55/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்திய அணியை அடுத்ததாக வந்தா ஜிதேஷ் சர்மா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த போதிலும் 24 (16) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த அக்சர் படேல் தம்முடைய தரத்தை காட்டும் அளவுக்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 6வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றி 31 (21) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 53 (37) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த வகையில் சவாலான பிட்ச்சில் 150 ரன்கள் கூடாது தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 160/8 ரன்கள் எடுத்து ஓரளவு அசத்தியது. ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெரன்ஃடாப், துவர்சுய்ஸ் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

இதையும் படிங்க: சவாலான பிட்ச்சில் ஆட்டிப்பார்த்த ஆஸி.. போராடி திருப்பி அடித்த இந்தியா.. வெல்லப்போவது யார்?

இருப்பினும் பெங்களூரு மைதானத்தில் 200 ரன்கள் அடித்தால் கூட போதாது என்ற சூழ்நிலையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கட்டாயமாகிறது. மறுபுறம் இந்தியாவை 180 ரன்கள் கூட அடிக்க விடாமல் மடக்கி பிடித்துள்ள ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புவதற்கு பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement