IND vs SL : இலங்கையை வெறும் 73 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய இரட்டை உலக சாதனை

IND vs SL Siraj Rohit
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதிலும் ரோகித் சர்மா தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை சேர்த்த சுப்மன் கில் விரைவாக அரைசதம் கடந்த நிலையில் மறுபுறம் நிதானத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 42 (49) ரன்களில் அவுட்டானார். அதை வீணடிக்காமல் அடுத்து வந்த விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட சுப்மன் கில் சதமடித்து 14 பவுண்டரி 2 சிக்சருடன் 116 (97) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பிரம்மாண்டவெற்றி:
அதைத்தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து மேலும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயஸ் ஐயர் 38 (32) ரன்களில் அவுட்டான நிலையில் கேஎல் ராகுல் 7, சூரியகுமார் யாதவ் 4 என முக்கிய வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டிய சூழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கையை வெளுத்து வாங்கிய விராட் கோலி 13 பவுண்டரி 8 சிக்ஸருடன் 166* (110) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்ததால் இந்தியா 5 ஓவர்களில் 390/5 ரன்கள் குவித்தது.

சுமாராக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா மற்றும் கௌதம் ரஜிதா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 391 என்ற பெரிய இலக்கை துரத்திய இலங்கைக்கு அவிஷ்கா பெர்ணாண்டோ 1, நுவனிடு பெர்னாண்டோ 19, குசால் மெண்டிஸ் 4 என 3 முக்கிய டாப் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் முகமது சிராஜ் தனது அற்புதமான பந்து வீச்சால் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அசலங்கா 1, ஹசரங்கா 1, கருணரத்னே 1 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 39/6 என ஆரம்பத்திலேயே சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட கேப்டன் சனாகாவும் குல்தீப் யாதவ் சுழலில் 11 ரன்னில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் வெல்லலேகே 3 ரன்களில் வந்த வாக்கிலேயே சென்றார். இறுதியில் ரஜிதா 13* ரன்கள் எடுத்தாலும் தாக்குபிடிக்க முடியாத இலங்கை 22 ஓவரில் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அனலாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக அபீர்தீன் மைதானத்தில் நியூசிலாந்து 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய உலக சாதனையாகும். முன்னதாக இப்போட்டி நடைபெற்ற கிரீன்ஃபீல்டு மைதானம் வரலாற்றில் பவுலிங்க்கு சாதகமாக இருந்து வரும் நிலையில் டாஸ் வென்று பகல் நேரத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா உண்மையாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு 370 ரன்கள் விளாசி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

இதையும் படிங்க:IND vs SL : இலங்கையை வெறும் 73 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய இரட்டை உலக சாதனை

ஆனால் அடுத்து களமிறங்கிய இலங்கை கொஞ்சமும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் பிரம்மாண்ட வெற்றி 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Advertisement