முதல் 6 ஓவர்களிலேயே காட்டடி.. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக சாதனை படைத்த இளம்படை – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன்களை சேர்த்தது. அதிலும் குறிப்பாக துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஆண்டு கால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது.

அந்த வகையில் இன்றைய போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியில் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 6-ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் 25 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதேவேளையில் ஆறு ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி படைத்த சாதனை யாதெனில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவின் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றைய போட்டியில் இந்த இளம் படைத்த அடித்த 77 ரன்கள் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : 2 ஆவது டி20 போட்டியிலும் தமிழக வீரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம். டாசுக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ் எடுத்த முடிவு

இதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழந்து 74 ரன்கள் குவித்து இருந்ததே சாதனையாக இருந்த வேளையில் 7 ஆண்டுகால சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement