பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி.. என்னா வேகம்.. இந்திய அணிக்கு வாசிம் அக்ரம் ஓப்பனாக பாராட்டு

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா பின்னர் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி பரம எதிரி பாகிஸ்தானை 8வது முறையாக தோற்கடித்து வெற்றி சரித்திரத்தை தக்க வைத்தது.

அதை தொடர்ந்து வங்கதேசத்தையும் எளிதாக வீழ்த்திய இந்தியா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தை ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோற்கடித்து அசத்தியது. அப்படி சிறப்பாக செயல்பட்டு வருவதால் 2011 போல இம்முறை நிச்சயம் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது.

- Advertisement -

பிரேக் இல்லாத ட்ரெயின்:
ஏனெனில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல் பவுலிங் துறையில் பும்ரா, சிராஜ், சமி, குல்தீப் ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக ரவிந்தர் ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரும் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பிரேக் இல்லாத ட்ரெயின் போல அதிரடியாக செயல்பட்டு வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அகரம் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா ஒரு ட்ரெயின் பிரேக் பிடிக்காமல் போனால் எவ்வளவு வேகத்தில் செல்லுமோ அந்த வேகத்தில் அந்த வழியில் செயல்படுகிறார்கள். அந்தளவுக்கு திறமையும் நுணுக்கமும் தெரிந்த அவர்களுக்கு முக்கியமாக எப்படி தங்களின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது”

- Advertisement -

“மேலும் அவர்கள் சூழ்நிலைகளுக்கேற்றார் போல் ஒரு மாற்றத்தை மட்டுமே கடந்த போட்டியில் செய்தனர். இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகளில் யாராவது காயமடைந்தால் மட்டும் அல்லது யாராவது சுமாரான ஃபார்மில் இருந்தால் அல்லது பிட்ச் வித்தியாசமாக இருந்தால் வெறும் ஒரு மாற்றத்தை மட்டுமே செய்கின்றனர். குறிப்பாக இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதில் தாக்கூர் நீக்கப்பட்டு சூரியகுமார் மற்றும் ஷமி ஆகியோர் கொண்டுவரப்பட்டனர்”

இதையும் படிங்க: இன்னைக்கு அவரு ஆடுன ஆட்டம் பிரமாதம்ங்க. பங்களாதேஷ் அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

“அதில் ஷமி தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அவர்கள் நியூசிலாந்துக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்தாலும் கட்டுப்பாட்டுடன் சிறப்பாக சேசிங் செய்தனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கும் அணிக்கும் நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement