இன்னைக்கு அவரு ஆடுன ஆட்டம் பிரமாதம்ங்க. பங்களாதேஷ் அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

Markram
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக துவக்க வீரர் குவிண்டன் டி காக் 174 ரன்களையும், கிளாசன் 90 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 60 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 233 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக மஹமதுல்லா 111 ரன்கள் அடித்து அசத்தினார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : இது எங்களுக்கு மற்றொரு நல்ல நாளாக அமைந்துள்ளது. இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடைசி வரை சென்று இருந்தாலும் இறுதியில் இது நல்ல நாளாகவே அமைந்தது.

- Advertisement -

எங்கள் அணியின் டெத் பவுலிங்கில் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியின் பவுலர்கள் அனைவருமே டெத் ஓவர்களில் பந்துவீச கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இன்றைய போட்டியில் முஹம்மதுல்லா விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு எதிராக நாங்கள் அந்த திட்டங்களை பயன்படுத்தி பார்த்தோம். அதோடு இந்த போட்டியில் குவிண்டன் டி காக் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று கிளாஸன் உள்ளே வந்து அடித்து நொறுக்கினார்.

இதையும் படிங்க : அவர் அடிச்ச அடிக்கு எங்களிடம் பதில் இல்லை.. செமி ஃபைனல் கனவும் அவ்ளோ தான்.. சாகிப் சோகமான பேட்டி

எங்கள் அணியில் உள்ள ஆறு பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு மாதிரி விளையாடக் கூடியவர்கள். இருந்தாலும் ஒரு அணியாக நாம் அதிலிருந்து பாசிட்டிவான விடயங்களை எடுத்து வெற்றி பெறுவது தான் அவசியம். தெம்பா பவுமா இந்த போட்டியிலேயே விளையாட வருவார் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர் இன்று விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லை. எனவே நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இணைவார் என மார்க்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement