- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 – 5 பயணம்.. விராட் கோலிக்கு நாங்க தேவையில்லை.. இந்தியாவுக்கு தான் அவர் தேவை.. பும்ரா வெளிப்படை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்துள்ளது.

அத்துடன் நியூசிலாந்திடம் சந்தித்தது தோல்வியால் இத்தொடரில் இந்தியா தோற்கும் என்று கணித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பும்ரா தலைமையிலான அணி தக்க பதிலடியும் கொடுத்துள்ளது. முன்னதாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய நியூசிலாந்து தொடர் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடினார். அதனால் 36 வயதை கடந்து விட்ட அவரால் ஆஸ்திரேலியாவில் அசத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு தேவை:

அதற்கு முதல் போட்டியிலேயே 100* ரன்கள் குவித்த விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு விராட் கோலி தேவையில்லை என்று கேப்டன் பும்ரா கூறியுள்ளார்.

மாறாக 2012 முதல் இதுவரை 5 முறை ஆஸ்திரேலியாவில் விளையாடி பெரிய அனுபவத்தை கொண்டுள்ள விராட் கோலி தான் இந்தியாவுக்கு தேவை என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு தான் விராட் கோலி தேவை என்று நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்”

- Advertisement -

அனுபவமிக்க கோலி:

“மிகவும் அனுபவமிக்க அவருக்கு இது 4 அல்லது 5வது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம். எனவே தம்முடைய பேட்டிங் மற்றும் தகுதி என்ன என்பது விராட் கோலிக்கு தெரியும். இவ்வளவு நீண்ட வருடங்கள் நீங்கள் விளையாடும் போது இது போன்ற சில கடினமான சூழல்கள் ஏற்படலாம். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் அவர் எப்போதும் போட்டியில் செயல்பாடுகளை கொடுக்க முயற்சிக்கிறார்”

இதையும் படிங்க: ஆஸி என்னை பாத்து பயப்படுறாங்களா? 150க்கு இந்தியா ஆல் அவுட்டான பின் இதை தான் சொன்னேன்.. பும்ரா பேட்டி

“முதல் இன்னிங்ஸில் நல்ல பந்தில் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தமக்கான இடைவெளியை எடுத்து அசத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் நன்றாக விளையாடிய அவர் எங்களின் மற்ற பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். தொடரின் ஆரம்பத்திலேயே அவரைப் போன்ற சீனியர் வீரர் சதத்தை அடித்துள்ளது நல்ல தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். இதை விட அவரிடம் நீங்கள் எதுவும் கேட்க முடியாது” என்று கூறினார்.

- Advertisement -