ஆஸி என்னை பாத்து பயப்படுறாங்களா? 150க்கு இந்தியா ஆல் அவுட்டான பின் இதை தான் சொன்னேன்.. பும்ரா பேட்டி

Jasprit Bumrah 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோற்கும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கணித்தார்கள். ஆனால் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதனால் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து கம்பேக் கொடுத்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட்டானது. அப்போது இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மிரட்டலாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

150க்கு ஆல் அவுட்:

அதனால் 104க்கு ஆஸ்திரேலியாவை சுருட்ட உதவிய அவர் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உங்களைப் பார்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயந்து விட்டார்களா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

“உண்மையில் நான் ஆஸ்திரேலிய அணியை பற்றி சிந்திக்கவில்லை. என்னுடைய தயாராகும் முறை மற்றும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த போது பிட்ச்சில் கவனம் செலுத்தினேன். அந்த வகையில் நான் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறேன். 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் இப்போது எப்படியாவது நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சித்து விக்கெட்டுகளை எடுக்க விரும்புவீர்கள்”

- Advertisement -

பும்ரா மெசேஜ்:

“ஆனால் அந்த சூழ்நிலையில் அதிகமாக எதையும் முயற்சிக்காதீர்கள் செய்யாதீர்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய மெசேஜ்ஜாக கொடுத்தேன். அந்த சூழ்நிலையில் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக ரன்கள் எடுக்க முடியுமா அவ்வளவு முயற்சியை கொடுங்கள் என்று வீரர்களிடம் சொன்னேன். கேப்டனாக இந்த வெற்றியை பெற்றது எனக்கு மிகவும் ஸ்பெஷல்”

“150க்கு ஆல் அவுட்டான போதும் எங்களுடைய அணி உடைந்து விடவில்லை என்பதே மிகப்பெரிய நேர்மறையான விஷயமாகும். ஒவ்வொருவரும் தங்களால் அசத்த முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தார்கள். அது எங்களுக்கு அடுத்த போட்டிகளிலும் உதவும். அது அழுத்தத்தை சந்தித்து உங்களுடைய கேரியரில் வளர்வதற்கு உதவும்”

இதையும் படிங்க: அன்று முரளி விஜய் எனக்கு செய்த உதவியை இன்று நான் ஜெய்ஸ்வாலுக்கு செய்துள்ளேன் – கே.எல் ராகுல் நெகிழ்ச்சி

“அதற்காகவும் எங்களுடைய அணி செயல்பட்ட விதத்திற்காகவும் நான் பெருமை அடைகிறேன். ஏனெனில் நாங்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டோம். அந்த கடினமான சூழ்நிலையில் நாங்கள் பதிலடி கொடுத்தது நன்றாக இருந்தது. கேப்டனாக இல்லையென்றாலும் நான் எப்போதும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க விரும்புகிறேன். எங்களுடைய அணி இளமையாக இருப்பதால் கடினமான சூழ்நிலையில் நான் பந்து வீச விரும்புகிறேன். ஏனெனில் இளம் வீரர்களால் பொறுப்புடன் பந்து வீசுவது எளிதல்ல” என்று கூறினார்

Advertisement