2023 உ.கோ வெற்றி வரும் ஆனா வராது.. இங்கிலாந்து, ஆஸி மாதிரி உங்ககிட்ட அந்த பலம் இல்ல – இந்தியா பற்றி நாசர் ஹுசைன் பேட்டி

Nasser Hussain
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தியாவது 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சமாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

- Advertisement -

வரும் ஆனா வராது:
அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையிலும் அசத்தும் இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்று தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. அதனால் கடந்த 3 உலகக் கோப்பைகளில் சொந்த மண் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது போல் இம்முறை இந்தியா கோப்பையை வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் லியாம் லிவிங்ஸ்டன், மிட்சேல் மார்ஷ் ஆகியோரைப் போல் இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லாதது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அதனால் சொந்த மண்ணில் கோப்பை வெல்வதற்கு வாய்ப்பிருந்தாலும் தெளிவான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் அவர் அதை உடைத்து சாதிப்பதற்கு இந்திய அணியினர் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா கோப்பை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு தெளிவான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் எதிரணிகளும் தரமானதாக இருக்கின்றன. அதே சமயம் இந்திய அணியில் விராட் மற்றும் ரோகித் ஆகிய மகத்தான 2 பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதே போல கில் போன்ற வருங்கால வீரர்களுடன் பும்ரா குணமடைந்துள்ளது நல்ல செய்தியாகும்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இவர் விளையாட மாட்டார். போட்டிக்கு முன்பே – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

“எனவே பேட்டிங், பவுலிங்கை பொறுத்த வரை அவர்கள் நல்ல அணியை கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் கணிசமாக பந்து வீச மாட்டார்கள். பவுலர்கள் கணிசமாக பேட்டிங் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு முக்கிய குறையாகும். அதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளில் இருக்கும் ஆல் ரவுண்டர்கள் அவர்களிடம் இல்லை. அத்துடன் செமி ஃபைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement