விமர்சனங்கள் இருந்தாலும்.. 2024 டி20 உ.கோ வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.. யுவராஜ் ஆதரவு

Yuvraj Singh 2
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை துவங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள அந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்டிக் பாண்டியா தலைமையில் புதிய அணியை பிசிசிஐ களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனாலும் தற்போது ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்துள்ளதால் மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

யுவி ஆதரவு:
மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த பாண்டியா அடுத்ததாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடிக்கடி காயமடையும் நீங்கள் பேசாமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுங்கள் என்று ரசிகர்கள் பாண்டியாவை விமர்சித்து வருகிறார்கள். மேலும் 2023 உலகக் கோப்பையில் பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஷமி அட்டகாசமாக செயல்பட்டது போல் வேறு ஏதாவது இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

இந்நிலையில் விமர்சனங்கள் இருந்தாலும் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா தேவை என யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் அணியில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றியும் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா அணியில் முக்கியமான வீரர். எனவே இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் தேவை”

- Advertisement -

“அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைவதற்கு தேவையான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். அவரை பயன்படுத்தி நாம் சிறந்த செயல்பாடுகளை கொண்டு வர வேண்டும். அதே சமயம் கேப்டன்ஷிப் செய்வதற்கு நம்மிடம் பல வீரர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டார். அதே போல சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்”

இதையும் படிங்க: முதலில் போலின்னு நெனச்சேன்.. டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிக் உடனான நட்பு பற்றி விராட் கோலி

“ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வயதாகும் போது உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். குறிப்பாக ஒவ்வொரு அணியும் மூத்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நானும் இந்த சூழ்நிலையை சந்தித்துள்ளேன். ஆனால் அனுபவத்திற்கு என்றுமே மாற்று கிடையாது. அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் அதிகப்படியான அனுபவம் இருக்கிறது. ஆனாலும் அவருடைய அணி நிர்வாகம் வருங்காலத்தை பற்றி நினைக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement