முதலில் போலின்னு நெனச்சேன்.. டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிக் உடனான நட்பு பற்றி விராட் கோலி

Novok Djokovic and Virat Kohli
- Advertisement -

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். ஏனெனில் கடந்த 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 26,000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து 80 சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.

அதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட 3வது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அந்த நிலையில் விராட் கோலியுடன் கடந்த சில வருடங்களாகவே மொபைலில் மெசேஜ் செய்து தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் வீரர் நோவாக் ஜோகோவிக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

லெஜெண்ட்ஸ் நண்பர்கள்:
மேலும் அவரின் கேரியர் மற்றும் சாதனைகளை ரசிப்பதாக தெரிவித்த ஜோக்கோவிக் இந்தியாவுக்கு செல்லும் போது விராட் கோலியை நேரில் பார்த்து சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதன் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்த போது அது போலியான கணக்கிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.

இருப்பினும் உண்மையாகவே ஜோகோவிக் தமக்கு மெசேஜ் செய்திருந்ததாக தெரிவிக்கும் விராட் கோலி அப்போதிலிருந்து தாங்கள் நண்பர்களாக இருந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் சச்சினை முந்தி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த போது ஜோகோவிக் தமக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறும் விராட் கோலி இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“அவருடன் நான் இயல்பாக தொடர்பில் இருந்து வருகிறேன். முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோகோவிக் கணக்கை பார்க்கும் போது அவருக்கு ஹலோ என்று மெசேஜ் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு எனக்கு மெசேஜ் வந்திருந்தது. அப்போது அந்த கணக்கு போலியாக இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் அவருடைய பக்கத்தை சென்று பார்த்த பின் அது அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை தெரிந்து கொண்டேன்”

இதையும் படிங்க: 194 ரன்ஸ்.. மீண்டும் வெளுத்த நியூசிலாந்து.. புதிய கேப்டன் ஷாஹீன் அப்ரிடி தலைமையில் திணறும் பாகிஸ்தான்

“அப்போதிலிருந்து நாங்கள் செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். இதுவரை அவர் சாதித்துள்ள அனைத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களிடையே நல்ல நட்பு இருக்கிறது. உலக விளையாட்டு வீரர்களுடன் தொடர்பில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த போது அவர் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அவர் இந்தியாவுக்கு வரும் போது அல்லது அவர் விளையாடும் நாட்டில் நான் இருந்தால் விரைவில் சந்தித்து நட்பாக தேநீர் அருந்துவோம் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement