திறமை இருந்தும் பெரிய மேட்ச்ல தெறிச்சு ஓடுறாங்க அப்றம் எப்படி இந்தியா 2023 உ.கோ ஜெயிக்க முடியும் – ஹபீஸ் அதிரடி பேட்டி

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் இப்போது முதலே தயாராகி வருகின்றன. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் 2011க்குப்பின் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 90களில் ஐசிசி தொடர்களில் லீக் சுற்றை தாண்டுவதற்கே திண்டாடிய இந்திய அணி கங்குலி, தோனி ஆகிய மகத்தான கேப்டனின் வருகையால் பன்மடங்கு முன்னேறி இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விடுகிறது.

INDia

- Advertisement -

ஆனால் சாதாரண இரு தரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்படும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பலாக செயல்பட்டு 2013க்குப்பின் வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு தாரை வார்த்து வருவது இந்திய ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்வதற்கு தேவையான தகுதியும் திறமையும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் இந்தியாவிடம் இருப்பதாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

நாக் அவுட்டில் தெறிச்சு ஓடுறாங்க:
ஆனால் சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா நாக் அவுட் போன்ற பெரிய போட்டிகளில் சொதப்பினால் எப்படி கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சமீப காலங்களில் வெளிப்படுத்தி வரும் வலுவான செயல்பாடுகள் அவர்களுக்கு கூடுதல் பலமாகும். மேலும் கங்குலி தலைமையில் அவர்கள் உலகையே தோற்கடிக்கும் அணியாக உருவெடுத்தார்கள். அதை தோனி மற்றும் விராட் கோலி தொடர்ந்தார்கள்”

ENg vs IND Jos Buttler Alex hales

“அதனால் கடந்த 10 – 12 வருடங்களில் அனைத்து உலக கோப்பைகள் துவங்கும் போதும் வெல்லும் அணியாக திகழ்ந்து வருவதே இந்தியாவின் ஸ்பெஷலாகும். அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் இருதரப்பு தொடர்களில் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமாகும். சொந்த மண்ணில் இந்தியாவின் வெற்றி விகிதம் அதிகம். ஆனால் பெரிய தொடர்களில் மட்டும் இந்தியா தடுமாறுவதாக நினைக்கிறேன். குறிப்பாக சமீப காலங்களில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் அவர்களால் பெரிய போட்டிகளில் அசத்த முடியவில்லை”

- Advertisement -

“பொதுவாக இரு தரப்பு தொடர்களில் விளையாடுவதற்கும் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் விளையாடுவதற்கும் இடையே இருக்கும் அதிகப்படியான அழுத்தத்தை பல்வேறு வகைகளில் விவரிக்கலாம். குறிப்பாக அது உள்ளூர் அளவில் விளையாடுவதற்கும் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு உண்டான வித்தியாசத்தை போன்றதாகும். மொத்தத்தில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் வெற்றிகரமாக விளையாடுவதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமாகும். இருப்பினும் அந்த அழுத்தத்தை சரிவர கையாள்வதற்கு இந்தியா தடுமாறுகிறது”

Hafeez

“கடந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் செமி ஃபைனலில் தோற்றினர். 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஃபைனலில் தோற்றார்கள். ஆனால் அந்தத் தொடர்களிலும் அவர்கள் கோப்பையை வெல்லும் அணியாகவே இருந்தனர். எனவே இது மட்டும் தான் இந்திய அணி கவலைப்பட வேண்டிய விஷயமாகும். இருப்பினும் தற்போது இந்தியா தங்களை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. அவர்கள் பெரிய ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல இந்திய மண்ணில் விளையாடி உலக கோப்பையை வெல்வது பாகிஸ்தான் அணிக்கு எக்ஸ்ட்ரா அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களிடம் உலகின் தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளது. குறிப்பாக ஷாஹீன் அஃப்ரிடி போன்றவர்கள் நெருப்பாக பந்து வீசக்கூடியவர். சுழல் பந்து வீச்சு துறையிலும் சடாப் கான், இமாத் வாசிம் ஆகியோர் உள்ளனர்”

இதையும் படிங்க:200% ரிஸ்க் எடுப்பேன், தற்போதைய இந்திய அணியில் அந்த எண்ணத்துடன் என்னை போல எந்த ப்ளேயரும் இல்ல – சேவாக் ஆதங்கம்

“அதை விட இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அதை பாகிஸ்தான் வீரர்கள் உடைமாற்றும் அறையில் எப்படி கையாண்டு விளையாடப் போகிறார்கள் என்பதில் தான் வெற்றி இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement