பாகிஸ்தானை விட பாதாளத்திற்கு சரிந்த இங்கிலாந்து.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்ததா?

WTC Table 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா கம்பேக் கொடுத்து தொடரையும் சமன் செய்தது.

அதை விட ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மாபெரும் சாதனை படைத்தது. அந்த நிலையில் ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது

- Advertisement -

புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்:
அதனால் கடந்த 12 வருடங்களாக தங்களுடைய சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. மேலும் கடந்த 12 வருடங்களில் விளையாடிய 17 தொடர்களையும் வென்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற உலக சாதனையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மறுபுறம் முதல் போட்டியில் வென்றாலும் அதன் பின் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 தொடருக்கான புதிய புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் மொத்தம் 5 வெற்றிகள் 2 தோல்வி 1 ட்ராவை பதிவு செய்துள்ள இந்தியா 62 புள்ளிகளை 64.58 சதவிகிதத்தில் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றும் 2வது இடத்தை பிடித்துள்ள இந்தியா 5வது போட்டியில் வெல்லும் பட்சத்தில் முதலிடம் பிடிப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அதே புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 75% புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 55% புள்ளிகளுடன் 3வது இடத்திலும் வங்கதேசம் 50% புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: ஆந்திராவில் அராஜகம்.. அரசியல்வாதி மகனால் ஹனுமா விஹாரிக்கு நேர்ந்த சோகம்.. பிசிசிஐ மீது கொதிக்கும் ரசிகர்கள்

பாகிஸ்தான் 36.66% புள்ளிகளுடன் 5வது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் 33.33% புள்ளிகளுடன் 6வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 25.00% புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளன. இந்த அணிகளை தொடர்ந்து இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து 19.44% புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு சரிந்து பாதாளத்தில் தவிக்கிறது. இதே புள்ளி பட்டியலில் இலங்கை 0% புள்ளிகளுடன் அதல பாதாளத்தில் திண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement