ஆந்திராவில் அராஜகம்.. அரசியல்வாதி மகனால் ஹனுமா விஹாரிக்கு நேர்ந்த சோகம்.. பிசிசிஐ மீது கொதிக்கும் ரசிகர்கள்

Hanuma Vihari 2
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆந்திரப்பிரதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதை விட இந்த தொடருடன் இனிமேல் ஆந்திரப் பிரதேசத்துக்கு விளையாட மாட்டேன் என்று நட்சத்திர வீரர் ஹனுமா விகாரி தற்போது அறிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

குறிப்பாக 2021இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை காயத்தையும் பொருட்படுத்தாமல் அஸ்வினுடன் சேர்ந்து காப்பாற்றிய அவர் டிரா செய்ய உதவியதை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அந்த காயத்திற்கு பின் இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும் அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடி வருகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் அரசியல்:
அந்த நிலையில் இத்தொடரில் ஆந்திர அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் முதல் போட்டிக்கு பின் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ஆந்திர அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் கேஎன் பிரித்விராஜ் எனும் வீரரிடம் கேப்டன் என்ற முறையில் விகாரி கண்டிப்புடன் நடந்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் அதற்காக ஆந்திர மாநில அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் அந்த வீரரின் தந்தை தம்முடைய கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக ஹனுமா விகாரி தற்போது கூறியுள்ளார்.

அதன் காரணமாக இனிமேல் ஆந்திரா அணிக்காக விளையாட போவதில்லை என்று அறிவித்துள்ள விஹாரி பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “கடைசி வரை போராடியும் வெற்றி காண முடியவில்லை. ஆந்திராவுக்காக மற்றுமொரு காலிறுதியில் தோற்றது வருத்தமளிக்கிறது. இந்த பதிவில் சில உண்மைகளை நான் சொல்கிறேன். பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான் கேப்டனாக இருந்தேன். அந்தப் போட்டியின் போது 17வது வீரரை நான் திட்டினேன்”

- Advertisement -

“அவர் அரசியலில் இருக்கும் தன்னுடைய தந்தையிடம் அதைப் பற்றி புகார் செய்தார். அதற்கு அந்த தந்தை மாநில வாரியத்திடம் என் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டார். அதனால் அப்போட்டியில் பெங்காலுக்கு எதிராக 410 ரன்களை சேசிங் செய்தும் என் மீது எந்த தவறு இல்லாத போதும் கேப்டன்ஷிப் பதவிவை ராஜினாமா செய்யுமாறு என்னிடம் கேட்கப்பட்டது. அந்த வீரரிடம் நான் தனிப்பட்ட குறிப்பில் எதுவும் சொல்லவில்லை”

“ஆனால் கடந்த வருடம் ஒற்றைக் கையில் காயத்துடன் விளையாடி 7 வருடங்களில் ஆந்திராவை 5 முறை நாக் அவுட்டுக்கு அழைத்துச் சென்று இந்தியாவுக்காக 16 போட்டிகளில் விளையாடிய வீரரை விட அந்த வீரர் முக்கியம் என்று மாநில வாரியம் கருதுகிறது. நான் சங்கடமாக உணர்ந்தேன். என்னுடைய அணியை மதிப்பதாலேயே இந்த சீசனில் விளையாடினேன். சோகமான விஷயம் என்னவெனில் வாரியம் என்ன சொன்னாலும் வீரர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறது”

இதையும் படிங்க: இனிமே 3 ஆவது இடம் உங்களுக்கு தான்.. தரமான சம்பவத்தை செய்த சுப்மன் கில் – இதை நோட் பண்ணீங்களா?

“நான் அவமானமாகவும் சங்கடமாகவும் உணர்ந்தேன். இன்று வரை அதை வெளிப்படுத்தவில்லை. என்னுடைய சுயமரியாதையை இழந்த ஆந்திராவுக்காக இனிமேல் விளையாட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் மாநிலம் வாரியத்தில் அரசியல்வாதி தலையிடும் அளவுக்கு பிசிசிஐ இருப்பதாக கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement