WTC Final : ஆஸி அணியில் அவ்ளோ லெப்ட் ஹேண்டர்ஸ் இருந்தும் – அஸ்வினை எடுக்காத ரோஹித்தை விளாசும் ஜாம்பவான் வீரர்

ashwin
- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதியான நேற்று துவங்கி 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதி வருகின்றன. அதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே இந்திய பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு 327/3 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்வதற்கு தேவையான வலுவான நிலையை எட்டியுள்ளது.

- Advertisement -

அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த டேவிட் பார்ட்னர் 43 ரன்களும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 ரன்களும் எடுத்தனர். அதை விட அடுத்ததாக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் இறுதி போட்டியில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து 146* ரன்களை குவித்தார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்யும் ஸ்டீவ் ஸ்மித் 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் மெகா பார்ட்னர்சிப் அமைத்து சதத்தை நெருங்கி 95 ரன்கள் எடுத்தார்.

அஸ்வின் இல்லயே:
முன்னதாக இப்போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ரோஹித் சர்மா சிராஜ், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருடன் 4வது பவுலராக ஷார்துல் தாக்கூரையும் ஒரே ஒரு ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஃபைனலில் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவரையும் ஒன்றாக தேர்ந்தெடுத்தது நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்திப்பதில் முக்கிய காரணமாக அமைந்தது.

Ashwin

இருப்பினும் அதில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் சிறப்பாகவே செயல்பட்டது வேறு கதை. ஆனால் கடந்த ஃபைனல் நடைபெற்ற சௌதம்டன் உட்பட இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் நூற்றாண்டுக்கு மேலாக சுழலுக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருமே விளையாட வேண்டுமென ரிக்கி பாண்டிங், சச்சின் போன்ற முன்னாள் வீரர்ககளின் ஆலோசனையை ஏற்காமல் புதிய முடிவை எடுத்த ரோகித் சர்மாவுக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வின் உலகிலேயே இடது கை பேட்ஸ்மேன்களை அதிகமாக அவுட் செய்த பவுலராக உலக சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியில் கவாஜா, வார்னர், தற்போது அடித்து நொறுக்கும் டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என டாப் 7இல் 4 பேட்ஸ்மேன் இடது கை வீரர்களாக இருக்கும் நிலையில் அவரை தேர்வு செய்யாமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் முதல் நாளில் உணவு இடைவெளிக்கு பின் இந்திய வீரர்கள் சோர்வடைந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் ஆஸ்திரேலியா 600 ரன்கள் அடிப்பது உறுதி என்று எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வினை தேர்வு செய்யாமல் இந்தியா ட்ரிக்கை தவற விட்டுள்ளது. அவர் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர். அவரைப் போன்ற வீரரை தேர்வு செய்யும் போது நீங்கள் பிட்ச்சை பார்க்க கூடாது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனலில் நீங்கள் நம்பர் ஒன் பவுலரை எடுக்கவில்லை”

இதையும் படிங்க:WTC Final : விராட் கோலி பேனருக்கு முன் தட்டுத் தடுமாறி கீழே விழ சென்ற ரோஹித் சர்மா – அவரைப்போல திணறும் இந்தியா

“இந்திய அணியின் இந்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நானாக இருந்தால் நீண்ட காலங்கள் விளையாடாமல் சுமாராக பந்து வீசும் உமேஷ் யாதவுக்கு பதிலாக அவரை தேர்ந்தெடுத்திருப்பேன். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் 4 இடது கை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக்கூடிய அஸ்வின் போன்ற ஆப் ஸ்பின்னர் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. முதல் நாளின் உணவு இடைவேளைக்குப்பின் இந்தியா சோர்ந்து போய் விட்டனர். அதனால் ஆஸ்திரேலியா 550 – 600 ரன்கள் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement