WTC Final : விராட் கோலி பேனருக்கு முன் தட்டுத் தடுமாறி கீழே விழ சென்ற ரோஹித் சர்மா – அவரைப்போல திணறும் இந்தியா

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் அந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்த கேப்டன் ரோகித் சர்மா 4வது பவுலராக ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது நிறைய இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

அந்த நிலைமையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 43 ரன்களில் அவுட்டானார். அவருடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். அதில் ஒருபுறம் ஸ்மித் நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஹெட் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் ஆளாக சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

தடுமாறிய ரோஹித்:
அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஸ்மித்தும் 95* ரன்கள் விளாசி சதத்தை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 327/3 ரன்களை எடுத்து இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வி பெறுவது உறுதியென இப்போதே இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவலையை வெளிப்படுத்துகின்றனர். முன்னதாக இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக ஓவல் மைதானத்தின் பெவிலியனிலிருந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா படியில் தடுமாறி கீழே விழ தெரிந்தார்.

குறிப்பாக மைதானத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கிய அவர் மடங்கும் இடத்தில் சரியாக கவனிக்காமல் ஒரு படியில் காலை மோதியதால் கீழே விழ தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து தொடர்ந்து நடந்து சென்றார். அந்த இடத்தில் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்த ரசிகரின் கையில் “எப்போதுமே விராட் கோலி தான் என்னுடைய கேப்டன்” என்ற பேனர் இருந்தது மிகப்பெரிய கதையை சொல்கிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் 2014ஆம் ஆண்டு தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தடுமாறிய இந்தியாவை வெளிநாடுகளில் எதிரணிகளை தெறிக்க விட்டு வெற்றி பெறும் அணியாக மாற்றிய அவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக இருந்த போதிலும் ஒருநாள் பதவி பறிக்கப்பட்ட சர்ச்சையில் பதவி விலகினார்.

சொல்லப்போனால் அடுத்தடுத்த ஃபைனல்களில் இந்தியா விளையாடுவதற்கு அவர் தான் காரணம் என்றே சொல்லலாம். மறுபுறம் கடந்த ஜனவரியிலேயே புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேச மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் காயத்தால் வெளியேறிய நிலையில் இப்போது தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக செயல்படுகிறார்.

இதையும் படிங்க:WTCFinal : ரோஹித்தை விடுங்க.. அஷ்வினின் நீக்கம் குறித்து பவுலிங் கோச் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

இருப்பினும் விராட் கோலியால் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் வெல்ல முடியாத கோப்பையை 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்ற ரோகித் சர்மா வென்று கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் முதல் நாளிலேயே அவரது தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் சரமாரியாக அடி வாங்குவதால் ரசிகர்கள் அந்த நம்பிக்கையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement