2011இல் நாங்க அந்த தப்பை செஞ்சோம்.. அஸ்வினே ஆடிருந்தாலும் ஜெயிச்சுருக்க முடியாது.. முரளிதரன் பேட்டி

Muttiah Muralitharan
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் சோகமாகவும் அமைந்தது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா லீக் சுற்றில் தோல்விகளை சந்திக்காத ஒரே அணியாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை வீழ்த்தி உச்சகட்ட ஃபார்மில் அசத்தியது.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா தவற விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

அஸ்வின் இருந்தாலும்:
முன்னதாக 137 ரன்களை அடித்து தோல்வியை பரிசளித்த இடது கை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டை ஃபைனலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அவுட்டாக்கி இந்தியாவை வெற்றியை பெற கொடுத்திருப்பார் என்று நிறைய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஒருவேளை அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது என ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்

அதற்கான காரணத்தை விளக்கி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா மைதானத்தில் இருந்த சூழ்நிலைகளை சரியாக கவனித்தார்கள். 1996 உலகக்கோப்பை ஃபைனலில் நாங்களும் அதை செய்தோம். குறிப்பாக ஏறக்குறைய இதே இலக்கை (242) நாங்களும் சேசிங் செய்தோம். ஏனெனில் அதற்கு முந்தைய நாள் நாங்கள் மைதானத்தில் பனியின் தாக்கம் இருந்ததை பார்த்தோம். அதனால் அர்ஜுனா மற்றும் அரவிந்தா ஆகியோர் 7 விக்கெட்கள் மீதம் வைத்து சேசிங் செய்து கொடுத்தனர்”

- Advertisement -

“சில நேரங்களில் நீங்கள் வரலாற்றையும் திரும்பி பார்க்க வேண்டும். 2011 உலக கோப்பையில் இதே தவறை நாங்கள் செய்தோம். குமார் சங்ககாரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த பின் நாங்கள் தடுமாறி சராசரியான ஸ்கோர் மட்டுமே எடுத்தோம். மேலும் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே பனியின் தாக்கம் வருவதற்கு முன் சில விக்கெட்களை எடுத்தோம். ஆனால் பனி வந்ததும் எங்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை”

இதையும் படிங்க: விராட், ரோஹித் இல்லாம உங்களால அதை சாதிக்க முடியாது.. பிசிசிஐ மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

“அதன் பின் தோனி மற்றும் கம்பீர் ஆகியோர் ஒருதலைபட்சமாக போட்டியை வெற்றிகரமாக முடித்தார்கள். அதனால் ஒருவேளை ஃபைனலில் அஸ்வின் விளையாடியிருந்தாலும் முடிவு மாறியிருக்காது. ஏனெனில் பனி வரும் போது பந்து அதிகமாக சுழலாது. நேராக செல்லும். அதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடுவார்கள். இதை நான் 2011 ஃபைனலில் கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement