இப்போ மட்டும் சுகமா இருக்கா பென் ஸ்டோக்ஸ்? அம்பயர்களால் இந்தியாவுக்கு சேர்ந்த 4 சோகம்.. ரசிகர்கள் கோபம்

Ben Stokes DRS 3
- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் நான்காவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் 177/7 என்று சரிந்த இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில் துருவ் ஜுரேல் அபாரமாக பேட்டிங் செய்து 90 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

சுகமா இருக்கா:
அவருடன் குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்ததால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 46 ரன்கள் மட்டுமே பின்தங்கியது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயா பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இத்தொடரில் 2, 3வது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி முறையே குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா சுழலில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார்.

அதை கிராவ்லி ரிவியூ செய்த போது பந்து முழுமையாக ஸ்டம்ப் மீது அடிக்காமல் லேசாக உரசிக்கொண்டு சென்றது. ஆனால் அப்போது ஏற்கனவே களத்தில் இருந்த நடுவர் அவுட் என்ற தீர்ப்பை வழங்கியிருந்ததால் (அம்பயர்ஸ் கால்) மீண்டும் மூன்றாவது நடுவர் அதே தீர்ப்பை வழங்கினார். அதனால் அதிருப்தியடைந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அந்த 2 தீர்ப்புகளும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாக விமர்சித்ததுடன் வருங்காலங்களில் அம்பயரஸ் கால் முடிவை டிஆர்எஸ் சோதனையின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் சுப்மன் கில், ரஜத் படிடார், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகிய 4 இந்திய வீரர்களின் விக்கெட்டை இங்கிலாந்து எல்பிடபிள்யூ முறையில் எடுத்தது. ஆனால் அந்த 4 விக்கெட்டிலும் ஸ்டம்ப் மீது பந்து முழுமையாக அடிக்காமல் லேசாக உரசிக்கொண்டு சென்றது. மேலும் அந்த 4 விக்கெட்டில் சுப்மன் கில் ரிவியூ செய்த போது களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் 3வது நடுவர் மீண்டும் அதே தீர்ப்பை வழங்கினார்.

இதையும் படிங்க: தந்தையைப் போல் இந்தியாவை காப்பாற்றிய மகன் ஜுரேல்.. சல்யூட் அடித்து கொண்டாடிய காரணம் என்ன?

இப்படி ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அம்பயர்ஸ் கால் காரணமாக இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2019 கொல்கத்தா டெஸ்டில் வங்கதேசத்துக்கு எதிராக அம்பயர்ஸ் கால் டிஆர்எஸ் விதிமுறையால் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்ததே முந்தைய அதிகபட்சமாகும். ஆனால் இதற்கு மட்டும் வாய் திறக்காத பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியுடன் விக்கெட்டை கொண்டாடினார். அதனால் “இப்போ மட்டும் சுகமா இருக்கா” என்று இந்திய ரசிகர்கள் அவர் மீது சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement