WTC Final : கோப்பையை விடுங்க, டாஸ் தவிர ஒரு செஷனை கூட ஜெயிக்கல – தோல்வி கன்ஃபார்ம், முன்னாள் இந்திய வீரர் வேதனை

Micthell Starc
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை நோக்கி பயணித்து வருகிறது. ஜூன் 7ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Indian Batters

- Advertisement -

அதை விட பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது நாள் முடிவில் 151/5 என்ற ஸ்கோருடன் ஃபாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பரிதாப நிலையில் போராடி வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 71/4 என சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 ரன்களில் அவுட்டாக களத்தில் ரகானே 29*, பரத் 5* ரன்களில் இருக்கிறார்கள்.

ஒரு செஷன் கூட ஜெயிக்கல:
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை கிடைத்தும் முதலில் பேட்டிங் செய்யாமல் பந்து வீச தீர்மானித்த கேப்டன் ரோஹித் சர்மா உலகின் நம்பர் ஒன் பவுலர் அஸ்வினை கழற்றி விட்ட முடிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை விட டாஸ் வென்று 2 நாட்கள் முடிந்தும் இதுவரை எந்த ஒரு மணி நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா செயல்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வேதனையை கொடுக்கிறது.

Rohit Sharma 15

இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்றதை தவிர்த்து எதையுமே இந்தியா வெற்றி பெறவில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இதுவரை நடைபெற்ற 2 நாட்களில் நடந்த 6 செஷன்களில் ஒன்றைக் கூட இந்தியா வெல்ல முடியாத அளவுக்கு அசத்தும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றியின் உச்சத்தை நோக்கி செல்வதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இங்கு பேசுவதற்கு 2 விவாதங்கள் இல்லை. அவர்கள் இந்தியாவின் 5 பேட்ஸ்மேன்களை வெறும் 151 ரன்களுக்கு அவுட்டாக்கியுள்ளார்கள். அதனால் ஆஸ்திரேலியா இப்போட்டியின் டாப்பில் இருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக 2 நாட்களின் வெற்றிகரமான செயல்பாடுகள் முழுமையும் ஆஸ்திரேலியாவை சேரும் என்று நினைக்கிறேன். மறுபுறம் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா இதுவரை ஒரு செசனை கூட வெற்றி பெறவில்லை. 2வது நாளின் காலை செஷன் சில விக்கெட்டுகள் கிடைத்து இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும் 100 ரன்களை கொடுத்ததால் அதில் வென்றோம் என சொல்ல முடியாது. எனவே இதுவரை நடைபெற்ற 2 நாட்களிலும் ஆஸ்திரேலியா தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது”

“ஏனெனில் அவர்கள் மிகவும் துல்லியமான லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி பந்து வீசி வருகிறார்கள். இந்த பிட்ச்சில் நீங்கள் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் எடுக்கிறீர்கள் என்றால் உங்களுடைய லென்த் ஃபுல்லாக இருக்கிறது என்று அர்த்தம். அந்த வகையில் போலண்ட், கமின்ஸ், க்ரீன் என அனைவருமே துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக விராட் கோலியை முக்கிய நேரத்தில் மிட்சேல் ஸ்டார்க் அவுட்டாக்கிய பந்து யாராலும் அடிக்க முடியாத ஒன்றாகும்”

இதையும் படிங்க:WTC Final : அதிர்ஷ்டத்தால் தப்பிய அஜின்க்யா ரஹானே. நல்லவேளை தப்பிச்சிட்டாரு – இல்லனா கதை க்ளோஸ் ஆகியிருக்கும்

“அத்துடன் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச்சில் ஸ்பின்னர்கள் விக்கெட்டை எடுக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? அந்த கூற்றை நேத்தன் லயன் தவறு என்று இப்போட்டியில் காண்பித்துள்ளார். மொத்தத்தில் அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களும் பொறுப்புடன் செயல்பட்டு விட்டுகளை எடுத்துள்ளனர்” என்று கூறினார். அப்படி மாபெரும் ஃபைனலில் வெறும் ஒரு மணி நேரத்தை கூட வெல்லாத இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து என்ன பயன் என ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement