WTC Final : அதிர்ஷ்டத்தால் தப்பிய அஜின்க்யா ரஹானே. நல்லவேளை தப்பிச்சிட்டாரு – இல்லனா கதை க்ளோஸ் ஆகியிருக்கும்

Rahane
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பதிவுவீச்சை தேர்வு செய்தார்.

Rohit

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்க்ஸை துவங்கி விளையாடிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது. நேற்றைய ஆட்டநேர முடிவில் ரகானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Rahane 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா மற்றும் விராட் கோலி என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தருமாறியது. அந்த வேளையில் கைகோர்த்த ஜடேஜா மற்றும் ரஹானே ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து சற்று நம்பிக்கை அளித்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ரகானே 17 ரன்களில் இருந்த போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு முறையில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் ரகானே ரிவியூ கேட்க மூன்றாவது அம்பயர் பந்தினை பரிசோதிக்கையில் பேட் கம்மின்ஸ் நோபால் வீசியது உறுதியாகியது.

இதையும் படிங்க : WTC Final : சுப்மன் கில் சின்ன பையன் கத்துக்குவான் ஆனா இவ்ளோ அனுபவம் இருந்தும் நீங்க வேஸ்ட் – சீனியரை விளாசிய சாஸ்திரி

இதன் காரணமாக அதிர்ஷ்டத்தால் விக்கெட்டில் இருந்து தப்பிய ரகானே தற்போது 29 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் சதம் அடித்து அசத்துவாராயின் இந்தியா ஒரு நல்ல நிலையை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement