WTC Final : சுப்மன் கில் சின்ன பையன் கத்துக்குவான் ஆனா இவ்ளோ அனுபவம் இருந்தும் நீங்க வேஸ்ட் – சீனியரை விளாசிய சாஸ்திரி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. ஜூன் 7ஆம் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 469 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 4வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்த 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்திய சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து வீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 (51) ரன்களில் அவுட்டானர். அதன் காரணமாக 2வது நாள் முடிவில் 151/5 என திணறும் இந்தியா ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கு இன்னும் 119 ரன்கள் எடுக்க வேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. களத்தில் ரகானே 29*, பரத் 5* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

அனுபவம் வேஸ்ட்:
முன்னதாக இந்த போட்டியில் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா பேட்டிங்கிலாவது போராடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக சமீப காலங்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் பந்தை அடிக்காமலேயே கிளீன் போல்ட்டானார். அவரை விட கடந்த 10 வருடங்களாக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் என பெயரெடுத்த புஜாரா கொஞ்சம் கூட அனுபவத்தை காட்டாமல் கேமரூன் கிரீன் போன்ற இளம் பவுலர் வீசிய பந்தை அடிக்காமல் விட்டு அதே போல கிளீன் போல்ட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

இத்தனைக்கும் எஞ்சிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் அவர் மட்டும் இதே இங்கிலாந்தில் நடந்த கவுண்டி தொடரில் கடந்த 2 மாதங்களாக விளையாடி சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருந்தும் அப்படி அவுட்டானது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் சுப்மன் கில் இளம் வீரர் என்பதால் இந்த பாடத்தை கற்றுக்கொள்வார் ஆனால் அனுபவமிக்கராக இருக்கும் புஜாரா ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்று தெரியாமலேயே பந்தை அடிக்காமல் விட்டு கிளீன் போல்ட்டானதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முன்னங்கால் குறுக்கே சென்றும் பந்தை மோசமாக தவற விட்ட அவர் (கில்) பந்தை நோக்கி சென்றிருக்க வேண்டும். அந்த சமயத்தில் அவர் அந்த பந்தை அடிக்கலாம் என்று நினைத்து விட்டு பின்னர் விடலாம் என்று முடிவெடுத்தார். அப்படி பந்தை பார்த்த அவர் ஆஃப் ஸ்டம்ப்பை நன்றாக காட்டினார். அந்த சமயம் அவருடைய கால் ஆஃப் ஸ்டம்ப் நோக்கி செல்வதற்கு பதிலாக மிடில் ஸ்டம்ப்பிலேயே இருந்தது. அந்த முன்னங்காலை பாருங்கள். அது பந்தை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும். அது தவறாக எடுக்கப்பட்ட முடிவாகும்”

“பொதுவாக இங்கிலாந்தில் நீங்கள் பந்தை அடிக்காமல் விடும் போது உங்களுடைய ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்று தெரியாதது போல் நீங்கள் அவுட்டானீர்கள். அந்த நிலையில் சற்று சோம்பேறித்தனமாக செயல்பட்ட சுப்மன் கில் கூட இளம் வீரராக இருப்பதால் கற்றுக் கொள்வார்”

இதையும் படிங்க:WTCFinal : இந்தநேரம் பாத்து நீங்க இல்லாம போயிட்டிங்களே? ரிஷப் பண்டை நினைத்து ரசிகர்கள் வேதனை – ஏன் தெரியுமா?

“ஆனால் புஜாரா அப்படி அவுட்டானதை பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. இவ்வளவு அனுபவத்தை கொண்டுள்ள அவர் பந்தின் லைனை நோக்கி தனது காலை நகர்த்தியிருக்க வேண்டும். அதனால் தான் அனைவரும் எப்போதுமே உங்களுடைய ஆஃப் ஸ்டம்ப்பை தெரிந்து விளையாடுங்கள் என்று சொல்வார்கள்” எனக் கூறினார்.

Advertisement