WTCFinal : இந்தநேரம் பாத்து நீங்க இல்லாம போயிட்டிங்களே? ரிஷப் பண்டை நினைத்து ரசிகர்கள் வேதனை – ஏன் தெரியுமா?

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது.

Rohit

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் இரண்டாம் நாளில் தங்களது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்துள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் ரஹானே 29 ரன்களுடனும், கே.எஸ் பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியை விட 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rishabh-Pant

குறிப்பாக ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா மற்றும் விராட் கோலி என அனைவருமே 20 ரன்களை கூட தொடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். டாப் ஆர்டரின் இந்த சரிவு இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இதுபோன்ற முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை எந்த நாடாக இருந்தாலும் தனது அதிரடியை காண்பிக்கும் ரிஷப் பண்ட் முக்கியமான இது போன்ற போட்டிகளில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க கூடியவர்.

இதையும் படிங்க : பிசிசிஐ அநியாயம் பண்ணிட்டாங்க, விராட் கோலி ஒன்டே கேப்டனா இருந்துருக்கணும் – ஆஸி ஜாம்பவான் ஆதங்க பேட்டி

அதுமட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசியுள்ள அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட்டையும் இங்கிலாந்தில் தான் துவங்கினார் என்பதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தே தனது ரன் குவிப்பை அவர் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு வீரர் இந்த போட்டியில் இல்லாதது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement