பிசிசிஐ அநியாயம் பண்ணிட்டாங்க, விராட் கோலி ஒன்டே கேப்டனா இருந்துருக்கணும் – ஆஸி ஜாம்பவான் ஆதங்க பேட்டி

Kohli-and-Rohit
- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327/3 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 146*, ஸ்டீவ் ஸ்மித் 95*, டேவிட் வார்னர் 43 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்தனர். இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்ட ரோகித் சர்மா மாபெரும் ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுக்காதது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அத்துடன் முதல் நாளில் உணவு இடைவெளிக்கு பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ரன்களை எடுக்கும் அளவுக்கு சுமாராக ஃபீல்டிங் செட்டப் செய்த அவருடைய கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதன் காரணமாக இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருக்கலாம் என்று நிறைய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் பவுலர்கள் தடுமாறும் சமயங்களில் கேப்டனாக ஆக்ரோஷமான ரியாக்சன்களை கொடுத்து உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய அவர் எதிரணியினரை ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதற்கு தயங்க மாட்டார்.

- Advertisement -

பிசிசிஐயின் அநியாயம்:
முன்னதாக தோனி விடைபெற்ற 2014இல் சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் உலகக் கோப்பை வெல்லவில்லை என்பதால் சந்தித்த விமர்சனங்களை நிறுத்த 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார்.

Kohli

ஆனால் 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி பணிச்சுமையை காரணமாக சொல்லி வெற்றிகரமான ஆசிய கேப்டனாக இருந்தும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதிவியை ராஜினாமா செய்தார்.

- Advertisement -

மறுபுறம் கடந்த ஜனவரியிலேயே புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் தொடரிலேயே காயத்தால் வெளியேறினார். அது போக ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியிலும் காயத்தால் வெளியேறிய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற தொடரிலும் வெளியேறினார். அந்த வகையில் கேப்டனாக பொறுப்பேற்று ஒரு வருடம் கழித்து இப்போது தான் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வழி நடத்தும் ரோகித் சர்மா இப்படி குளறுபடியான முடிவுகளை எடுத்து சுமாராக கேப்டன்ஷிப் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் விராட் கோலியின் ஆக்ரோஷம் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய கேப்டன்ஷிப் பதவியை பறித்து பிசிசிஐ அநியாயம் செய்து விட்டதாக ஆதங்கத்துடன் விமர்சித்துள்ளார். இது பற்றி இந்த ஃபைனலில் வர்ணனையாளராக செயல்படும் அவர் நேரலையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:WTC Final : இது வங்கதேசத்தை மட்டும் அடிக்கும் புலி, 2007 முதல் ஐசிசி நாக் அவுட்டில் திணறும் ரோஹித் சர்மா – உண்மை புள்ளிவிவரம் இதோ

“கேப்டனாக விராட் கோலியின் ஆக்ரோசத்தை நான் மிகவும் விரும்புகிறேன். பிசிசிஐ அவருக்கு அநீதி இழைத்தது என்பதை தவிர்த்து வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர விரும்பியிருந்தால் மரியாதை நிமித்தமாக அதை செய்ய அனுமதிக்க பட்டிருக்க வேண்டும். விராட் கோலியிடம் நான் விரும்பாத எதுவுமே இல்லை. அவருடைய ஆக்ரோஷம், ஆர்வம், பேட்டிங் போன்ற அனைத்தும் பிடிக்கும். அவர் அற்புதமான கேப்டன்” என்று கூறினார்.

Advertisement