WTC Final : இது வங்கதேசத்தை மட்டும் அடிக்கும் புலி, 2007 முதல் ஐசிசி நாக் அவுட்டில் திணறும் ரோஹித் சர்மா – உண்மை புள்ளிவிவரம் இதோ

Rohit Sharma 15
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்திய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 469 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது. அதிகபட்சமாக 3வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல 2 பவுண்டரிகளை அடித்து நல்ல துவக்கத்தை பெற்றும் பட் கமின்ஸ் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து 2019 உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து ஹிட்மேன் என ரசிகர்களிடம் பெயர் பெற்ற அவர் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறார்.

- Advertisement -

சொதப்பல் ஹிட்மேன்:
பொதுவாகவே ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போன்ற மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட திணறுவது வழக்கமாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ரோகித் சர்மா இருக்கிறார் என்றே சொல்லலாம். ஆம் கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8* ரன்களும் பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் 30* ரன்களும் எடுத்து ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றியில் பங்காற்றினார்.

ஆனால் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் முடிவால் நிரந்தர துவக்க வீரராக உருவெடுத்த அவர் அந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 33 ரன்களும் இங்கிலாந்துக்கு எதிரான ஃபைனலில் வெறும் 9 ரன்களும் எடுத்து சுமாராகவே செயல்பட்டார். இருப்பினும் இதர வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்தத் தொடரை கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா வென்ற நிலையில் 2014ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 24 ரன்களை மட்டுமே எடுத்த அவர் இலங்கைக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விக்கு ஒரு காரணமாக செயல்பட்டார்.

- Advertisement -

அதை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்து 137* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான அரை இறுதியில் 34 ரன்களுக்கு நடையைக் கட்டி தோல்வியில் பங்காற்றினார். அதே போல் சொந்த மண்ணில் நடைபெற்ற 2016 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தோற்ற அரையிறுதியில் 43 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதியில் சதமடித்து 123* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

ஆனால் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனலில் டக் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 1 ரன்னில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்தது யாராலும் மறக்க முடியாது. அதை விட 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக 34, 30 என 2 இன்னிங்சிலும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் 2022 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கேப்டனாக 27 ரன்களுக்கு அவுட்டாகி வெற்றி பெற உதவவில்லை.

- Advertisement -

மொத்தத்தில் தமது கேரியரில் இதுவரை ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 16 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிராக 2 இன்னிங்ஸில் 260 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் வலுவான அணிகளுக்கு எதிரான எஞ்சிய 14 இன்னிங்ஸில் வெறும் 317 ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் வங்கதேசத்தை மட்டும் அடிக்கும் புலி என்பதை போல் செயல்படுவது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க:அவரைப்பாத்து கத்துக்கோங்க விராட் கோலியை புகழ்ந்து ரோஹித் சர்மாவை விமர்சித்த – சவுரவ் கங்குலி

இதற்காக மேற்குறிப்பிட்ட தோல்விகளின் மொத்த பழியையும் அவர் மீது போடவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரரான அவர் 2013 முதல் எந்த ஐசிசி நாக் அவுட் போட்டியிலும் வலுவான எதிரணிக்கு எதிராக அசத்தி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றவில்லை என்பது வேதனையளிக்கிறது.

Advertisement