எனக்கு தெரிஞ்சு இந்திய அணியில் இப்படி ஒன்ன பாத்ததில்ல.. 5 ஸ்பெஷல் இருக்கு.. நாசர் ஹுசைன் பாராட்டு

Nasser Hussain
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சென்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா அடுத்ததாக நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் 4வது இடத்தை பிடித்த நியூஸிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அதில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் இதுவரை நியூசிலாந்தை சந்தித்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனாலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இத்தொடரின் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை ஐசிசி தொடரில் தோற்கடித்ததை போல் இம்முறையும் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

நாசர் ஹுசைன் பாராட்டு:
முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களுக்கு நிகராக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 பவுலர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி விடுகிறார்கள். குறிப்பாக ஷமி, பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

அதனால் ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களால் வென்ற இந்திய அணி தற்போது பவுலர்களால் வெற்றி பெற துவங்கியுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டியிருந்தார். இந்நிலையில் தாம் பார்த்ததிலேயே தற்போதுள்ள இந்திய பவுலிங் கூட்டணி தான் மிகவும் சிறந்தது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தற்போதைய 5 பவுலர்களில் ஒருவர் இல்லையென்றாலும் மற்றொருவர் அசத்தி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “தற்போதைய பந்து வீச்சு கூட்டணி நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்த இந்திய பந்து வீச்சு கூட்டணியாகும். கடந்த காலங்களில் இந்திய அணியில் சில மகத்தான பவுலர்கள் இருந்துள்ளனர்”

இதையும் படிங்க: 2 செமி பைனல் மேட்ச்சுமே மழையால் நடக்காம போனா என்ன ஆகும் தெரியுமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

“ஆனால் தற்போதுள்ள கூட்டணி தான் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. அதில் பும்ரா விக்கெட்டை எடுக்க தவறினால் சிராஜ் எடுத்துக் கொடுப்பார். ஒருவேளை சிராஜ் எடுக்க தவறினால் ஷமி எடுப்பார். ஒருவேளை அவர்கள் விக்கெட்டை எடுக்க தவறினால் 2 ஸ்பின்னர்கள் வந்து உங்களுக்கு விக்கட்டை எடுத்துக் கொடுப்பார்கள். பொதுவாக இந்திய அணியில் 5 ஸ்பெஷல் பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பந்து வீச்சில் 5 ஸ்பெஷல் வீரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement