2 செமி பைனல் மேட்ச்சுமே மழையால் நடக்காம போனா என்ன ஆகும் தெரியுமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

RSA-vs-AUS
- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பாக 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்படும். அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று இருந்தன.

அதன்படி கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த உலக கோப்பை தொடருக்கான முதலாவது அரையிறுதி போட்டியில் நவம்பர் 15-ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், நவம்பர் 16-ஆம் தேதி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரானது கடைசி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி மழையால் போட்டி நடைபெறாமல் போனால் என்ன நடக்கும்? அதற்கு விதிமுறைகள் கூறுவது என்ன? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அதன்படி இரண்டு போட்டிகளுமே மழை காரணமாக நடைபெற முடியாமல் போனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு புள்ளி பட்டியலில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றுள்ளதோ அந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : இந்தியா – நியூஸிலாந்து செமி ஃபைனல் நடைபெறும் மும்பை மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிற்கப்படுமாயின் இந்திய அணியும், தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நின்றால் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அந்த 2 அணிகளே இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று விதிமுறை தெளிவாக குறிப்பிடுகிறது.

Advertisement