இந்தியா – நியூஸிலாந்து செமி ஃபைனல் நடைபெறும் மும்பை மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளிப்பட்டியல் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்த நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் செமி ஃபைனலில் இந்தியா விளையாட உள்ளது. அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 2019 போல இந்தியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. ஆனாலும் தற்போது அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இதே தொடரில் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூஸிலாந்தை தோற்கடித்தது போல இம்முறையும் வீழ்த்தி இந்தியா ஃபைனலுக்கு செல்ல போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

வான்கடே மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1974இல் தோற்றுவிக்கப்பட்டு 32,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1987 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இதுவரை நடைபெற்றுள்ள 33 போட்டிகளில் 21 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 12 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் (455) அடித்த வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் அதிக விக்கெட்களை (15) எடுத்த பவுலராக இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்தும் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் தென்னாப்பிரிக்கா : 438/4, இந்தியாவுக்கு எதிராக, 2015.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 15ஆம் தேதி மும்பை நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 10% க்கும் குறைவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
வான்கடே மைதானம் வரலாற்றிலும் இந்த உலகக்கோப்பையிலும் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருக்கிறது. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 91/7 என சரிந்தும் ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் அதிரடியால் வென்றது.

- Advertisement -

எனவே இங்குள்ள பவுண்டரிகளின் அளவும் சிறியதாக இருக்கும் என்பதால் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் அடிப்பார்கள். அதே சமயம் இலங்கையை 55க்கு சுருட்டி இந்தியா வென்றது போல வேகப்பந்து வீச்சாளர்களும் புதிய பந்தில் ஸ்விங் செய்து மிரட்டுவார்கள். மேலும் ஸ்பின்னர்களும் நல்ல லைன், லென்த்தை பின்பற்றினால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கலாம்.

இதையும் படிங்க: 2019 ல விராட் கோலி செய்ஞ்ச தப்ப ரோஹித் இப்போ 2023 ல செய்யல. கப் நமக்கு தான் – கவுதம் கம்பீர் நம்பிக்கை

இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248, 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 199 ரன்களாகும். இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 16 முறை சேசிங் செய்த அணியும் பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்தால் பெரிய இலக்கை குவிக்க வேண்டும் அல்லது சேசிங் செய்தால் பெரிய இலக்கை துரத்த தயாராக இருக்க வேண்டும்.

Advertisement