2019 ல விராட் கோலி செய்ஞ்ச தப்ப ரோஹித் இப்போ 2023 ல செய்யல. கப் நமக்கு தான் – கவுதம் கம்பீர் நம்பிக்கை

Gambhir
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தேர்ச்சியும் பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.

அதன்படி நாளை நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியை சந்தித்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதியான அணி என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு விராட் கோலி செய்த தவறை இம்முறை ரோகித் சர்மா செய்யவில்லை என்றும் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது 2023-ல் ரோகித் சர்மா ஒரு நிலையான அணியை தொடர்ச்சியாக விளையாட வைத்து வருகிறார்.

- Advertisement -

இப்படி வீரர்களுக்கான இடத்தினை அவர் உறுதி செய்து ஓய்வறையிலும் நல்ல சூழலை மகிழ்ச்சியாக வைத்திருப்பதால் நிச்சயம் வீரர்கள் மத்தியில் நல்ல தெளிவு இருக்கும். ஒரு கேப்டனாக அவர் மீதமுள்ள 14 பேருக்கும் ஒரு பாதுகாப்பினை அளித்து வருவதால் நிச்சயம் இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும். ஏற்கனவே ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி தந்துள்ள வேளையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் அவரால் நிச்சயம் கோப்பைகளை கைப்பற்றி தர முடியும்.

இதையும் படிங்க : இந்தியா – நியூஸிலாந்து செமி ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

ரோஹித் சர்மா ஓய்வறையில் வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சூழ்நிலை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதோடு பரிசளிப்பு விழாவின் போதும் கூட அவர் சிறப்பாக செயல்படும் வீரர்களை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தினை கொடுத்து வருகிறார். இப்படி ஒரு லீடராக ரோகித் சர்மா வீரர்களிடம் நம்பிக்கையை கொடுத்து வருவது கோப்பையை கைப்பற்ற உதவும் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement