இந்தியா – நியூஸிலாந்து செமி ஃபைனலில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

IND vs NZ 2
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

டேவோன் கான்வே நிதானமாக விளையாடும் நிலையில் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடுவதால் நியூசிலாந்தின் ஓப்பனிங் ஜோடி வலுவாகவே இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து டார்ல் மிட்சேல் மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடும் திறமையை கொண்டிருக்கும் நிலையில் டாம் லாதம் மற்றும் மார்க் சேப்மேன் ஆகியோர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமைகிறது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
இருப்பினும் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யும் திறமையுடன் பகுதி நேர பவுலராக மாறி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். மேலும் மிட்சேல் சான்ட்னர் கிட்டத்தட்ட இந்தியாவின் ஜடேஜாவை போல சுழல் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் ஜிம்மி நீசம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வெற்றிக்கு போராட தயாராக இருக்கிறார்.

அதே போல வேகத்தில் ட்ரெண்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே சவாலை கொடுப்பவராக இருக்கும் நிலையில் லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுதி ஆகியோரும் நல்ல தரமும் அனுபவமும் கொண்டுள்ளனர். மறுபுறம் சுப்மன் கில் – ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கும் ஓப்பனிங் ஜோடியாக மிரட்டுகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா வெற்றிக்காக பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கும் நிலையில் விராட் கோலி ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரை இணைக்கும் பாலமாக இந்தியாவின் வெற்றி நாயகனாக போராட தயாராக இருக்கிறார். அவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த போட்டியில் 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல ஃபார்மில் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கிறார்கள்.

அதை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஃபினிஷிங் செய்து தம்முடைய தரத்தை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக எதிரணிக்கும் இந்தியாவுக்கும் குறுக்கே நிற்பார் என்று நம்பலாம். அதே போல குல்தீப் யாதவ் ஸ்பின்னராக மாயாஜாலம் நிகழ்த்தி வரும் நிலையில் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் இந்த உலகக்கோப்பையில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வெற்றிக்கு போராட தயாராகியுள்ளனர்.

- Advertisement -

எனவே தொடர்ந்து 9 போட்டிகளில் வென்றதைப் போல சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியா இப்போட்டியிலும் நியூசிலாந்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் முக்கிய கேட்ச்களை தவிரவிடாமல் இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும்.

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 59 போட்டிகளிலும் நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில் 1 போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி மழையால் கைவிடப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 9 போட்டிகளில் நியூசிலாந்து 5 வெற்றியும் இந்தியா 4 வெற்றியும் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: நாளைய அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

2. இந்த உலகக் கோப்பையில் மோதிய போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இருப்பினும் ஐசிசி தொடரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – நியூசிலாந்து மோதிய போட்டிகளில் அதிக ரன்கள் (1750) எடுத்த வீரராக சச்சினும் அதிக விக்கெட்களை (51) எடுத்தவராக ஜவகள் ஸ்ரீநாத்தும் முதலிடத்தில் இருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகப்படுத்த ஒருநாள் ஸ்கோர் 349/9 ரன்களாகும்.

Advertisement