நாளைய அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
Advertisement

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வர இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்று போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அந்த வகையில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், நான்காவது இடம் பிடித்த நியூஸிலாந்து அணியும் முதலாவது அரையிறுதி போட்டியில் நாளை நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளுமே முனைப்பு காட்டும். இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளைய இந்த முதலாவது அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில் அதற்கான உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே ரோகித் சர்மா இந்திய அணி ஒரு செட்டிலான அணியுடன் தான் பயணிக்கும் என்று கூறியிருந்த வேளையில் எந்த ஒரு போட்டியிலுமே சிறிய சமரசம் கூட இல்லாமல் முழு பலம் வாய்ந்த 11 பேர் கொண்ட அணியுடனே இந்திய அணி விளையாடி வந்தது. அதன் காரணமாக கடந்த போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அதே இந்திய அணி தான் இந்த அரையிறுதி போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது. இதனால் அணியில் எந்த ஒரு தேவையில்லாத மாற்றமும் நிகழாது என்று கூறலாம். அதன்படி நாளைய முதலாவது அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அரையிறுதி போட்டியின் போது மழையால் போட்டி நின்றால் இந்திய அணியின் நிலை என்ன? – ரூல்ஸ் கூறுவது என்ன?

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement